பொய் வழக்கிற்கு முடிவு காலம் வரும்! காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
சென்னை: அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் பதிவதாகவும் இதற்கெல்லாம் விரைவில் முடிவு காலம் வரும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறும் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் அவர் அதிமுக பொதுக்குழுவில் பேசியுள்ளார். காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என எல்லாமே விலை உயர்வு தான் மக்களுக்கு கொடுக்கப்பட்ட போனஸ் என எஸ்.பி.வேலுமணி விமர்சித்தார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட எல்லா திட்டங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் முடக்கி வருவதாகவும் தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் விமர்சித்தார்.
திமுகவுக்கு எப்போதுமே வாக்களிக்கக் கூடிய அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கூட இந்த முறை திமுக ஆட்சி வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருப்பதாகவும் தமிழகத்தில் அரசு ஊழியர்களே திமுக ஆட்சி எப்போது முடியும் எனக் காத்திருக்கும் சூழல் வந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் மற்றக் கட்சிகளில் சேருபவர்களின் எண்ணிக்கையை விட அதிமுகவில் இணைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது எனக் கூறினார்.
கூட்டணியை பற்றி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலைப்பட தேவையில்லை என்றும் அதனை எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொள்வார் எனவும் கூறிய எஸ்.பி. வேலுமணி, நீங்கள் உழைத்தால் மட்டும் போதும் என பொதுக்குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். திமுகவினரை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்றும் திமுக ஆட்சி நடப்பதே மீடியாவின் தயவில் தான் எனவும் பேசியிருக்கிறார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications