அதிமுக பொதுக்குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு! ஈபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவால் அதிமுக பொதுக்குழுவுக்கு சிக்கல்? - என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்?

    அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்துள்ளது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செவிசாய்க்கவில்லை. இதற்கிடையே தான் ஜூன் 23ல் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    பொதுக்குழு விஷயத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொதுக்குழு விஷயத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இதற்கிடையே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 22ல் விசாரணை நடத்தப்பட்டது. விடியவிடிய நடந்த விசாரணையில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிமன்றம் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவித்து வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டது.

    பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பு

    பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பு

    பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பின்னடவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்டார். மேலும் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.

    மேல்முறையீடு செய்ய முடிவு

    மேல்முறையீடு செய்ய முடிவு

    இந்நிலையில் தான் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர அவரது தரப்பு முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு

    எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு

    அதன்படி இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி தொடர்புடையது. இதில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

     ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

    ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

    அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்பதை அறிந்தே நேற்று ஓ பன்னீர் செல்வம் தரப்பில் நேற்று கேவியிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+