ADMK Meeting: அதிமுக தற்காலிகத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் இறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமியை எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் களத்தில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

அதிமுக பிரச்சனை
ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. செங்கோட்டையன் உள்ளிட்ட பல சீனியர்கள் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பு பணியை டெல்லி பாஜக தலைமை நேரடியாக செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக செயற்குழு பொதுக்குழு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
சென்னை வானகரம் ஶ்ரீவாரு வெகங்டாசலபதி மண்டபத்தில் தற்காலிக அதிமுக அவை தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுக்குழுவின் முதல் 8 தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 8 தீர்மானங்களை வாசித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது என்றும், கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்றும், தீவிர வாக்காளர் திருத்த பணியான SIRஐ அதிமுக வரவேற்கிறது என்றும், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications