சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டம்.. உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்துவது ஏன்? ஹைகோர்ட்டில் அதிமுக வழக்கு
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் வார்டு மறுவரையறை காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த மாவட்டங்களில் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உள்ளாட்சித் தேர்தல்
இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது இந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி விட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

தயாராகும் கட்சிகள்
அ.தி.மு.கவை பொறுத்தவரையில் அந்த கூட்டணியில் இருந்த பா.ம.க உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டது. இந்த 9 மாவட்டங்களுக்கான கூடுதல் தேர்தல் பொறுப்பாளர்களையும் அதிமுக அறிவித்து விட்டது. ஆளும் கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டன.

அ.தி.மு.க எதிர்ப்பு
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுவதற்கு அ.தி.மு.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒரே கட்டமாக தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஏற்கனவே மனு அளித்து இருந்தது.

கள்ள ஓட்டு
இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ' தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாகத்தான் நடைபெறுகிறது. ஆனால் 9 மாவட்டங்களில் மட்டுமே நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, பணப்பட்டுவாடா செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

விரைவில் விசாரணை
எனவே உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் நாங்கள் வைத்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். இதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications