Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த" 30 நிமிடம்.. "சேவல்" ஏழுமலை எதுக்காக எடப்பாடி பழனிசாமி ரூமுக்குள் நுழைந்தார்? திகுதிகு அதிமுக

மாஜி எம்பி ஏழுமலையை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதாக பேச்சு அடிபடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எடப்பாடி பழனிசாமி ரூமுக்குள், ஏழுமலை எதுக்கு போனார்"? என்பதுதான் இன்றைய தமிழக அரசியலில் எழுந்து வரும் பரபரப்பான கேள்வி..!

செஞ்சி சேவல் ஏழுமலை.. இவர் அதிமுகவில் சீனியர்.. ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார்.. முன்னாள் எம்பியும்கூட..!

வட தமிழகத்தில் ஏழுமலை என்றால் ரொம்ப ஃபேமஸ்.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், செஞ்சி தொகுதி இவருக்கு ஒதுக்கப்படும் என்று ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் சேர்ந்து உறுதி தந்திருந்தார்கள்...

ஆனால் இவருக்கு சீட் கிடைக்ககூடாது ஒரு குரூப் காய் நகர்த்தியது.. அதில் முக்கியமானவர் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் என்கிறார்கள்.. அதனால்தான், அந்த தொகுதி கடைசியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், தேர்தல் பிரச்சார சமயத்தில், "செஞ்சியில் பாமக தோற்கும்" என்று ஏழுமலை ஒரு ஷாக் பேட்டி தந்தார்..

நீக்கம்

நீக்கம்

கூட்டணியை பேசினார் என்றாலும், சட்டமன்ற பிரச்சார நேரத்தில் ஏழுமலை இப்படி பேசிவிடவும் அது கட்சி தலைமைக்கு பிடிக்கவில்லை.. அதனால், கட்சியிலிருந்ததே நீக்கப்பட்டார்... இப்படிப்பட்ட சூழலில்தான், ஏழுமலையை கட்சி தலைமையகத்துக்கு வருமாறு அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதன்படி ஏழுமலையும் தலைமையகம் வந்தார்.. மா.செ.க்கள் கூட்டம் முடிந்ததும் ஓபிஎஸ், இபிஎஸ், கேபி முனுசாமி, வைத்தியலிங்கம் 4 பேரும் எடப்பாடி ரூமில் இருந்தனர்... ஏழுமலை வந்திருப்பதை அறிந்ததும் உள்ளே அழைத்தனர்.. ஏழுமலையும் ரூமுக்குள் சென்றார்.. அவ்வளவுதான்... இவர்கள் எல்லாம் சேர்ந்து என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஏழுமலை ஏன் அந்த ரூமுக்குள் சென்றார்? என்ன நடந்திருக்கும்? கட்சியில் இருந்து விலக்கப்பட்டவருடன் அதிமுக தலைமை என்ன பேசியிருக்கும்? என்பதுதான் கேள்வியாக உள்ளன.

விளக்கம்

விளக்கம்

ஒருவேளை அவரை, மறுபடியும் கட்சியில் இணைப்பது குறித்து விவாதித்திருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், ஏழுமலை, எடப்பாடி பழனிசாமியிடம், தான் ஏன் அப்படி பிரச்சாரத்தில் பேசினேன் என்று விளக்கம் தந்திருப்பதாக தெரிகிறது..

பாஜக

பாஜக

"என்னை பழிவாங்கவே செஞ்சியை பாமகவுக்கு ஒதுக்க வைத்தார் சண்முகம்... அவரது நடவடிக்கையால்தான் வட தமிழகத்தில் கட்சி காணாமல் போய்க்கொண்டிருக்கிறது... பாமகவின் தேர்தல் வேலைகள் சரியில்லாததை கண்கூடாக பார்த்ததால் பாமக தோற்கும் என்று நான் பேசினேன். மற்றபடி கூட்டணிக்கு எதிராக பேசவில்லை... அப்படியிருந்தும் என்னை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்.. இப்போது, அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று சண்முகம் பேசுகிறார்.. இதுதானே கூட்டணி தர்மத்தை மீறும் செயல்தானே? அப்படின்னா அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை?" கேள்விகளை கேட்டாராம் ஏழுமலை.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த கேள்விகளுக்கு ஒன்றிற்குகூட யாராலும் பதில் சொல்ல முடியவில்லையாம்.. எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஏழுமலை இன்னும் கொஞ்சம் விஷயங்களை எடப்பாடியிடம் எடுத்து சொல்லி உள்ளார்.. "அதிமுகவின் உழைப்பாளிகளை இந்த சண்முகத்தால் இழந்து விடாதீர்கள்... இவரது டார்ச்சர் தாங்கமுடியாமல்தான் திமுகவுக்கு போனார் லஷ்மணன்... இன்றைக்கு அவர் எம்பியாக இருக்கிறார்.. இந்த நிலை இனியும் தொடர விடாதீர்கள். சண்முகத்தை அடக்கி வையுங்கள்.. இது கட்சிக்கு சரியல்ல" என்று நிறைய விஷயங்களை லிஸ்ட் போட்டு சொன்னாராம்.

ஏழுமலை

ஏழுமலை

ஏழுமலை சொன்ன எல்லாவற்றையும் கவனித்து கேட்டுக் கொண்டதாம் அதிமுக தலைமை. இதையடுத்து, ஏழுமலையை திரும்பவும் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேச்சையும் நடத்தி உள்ளனர்.. இந்த விஷயம் தெரிந்து மறுபடியும் கொந்தளித்து, மறுபடியும் ரீ-என்ட்ரி தந்துள்ளாராம் சிவி சண்முகம்.. அதெப்படி அவரை கட்சியில் சேர்க்கலாம் என்று பழையபடி ஆரம்பித்துவிட்டாராம்.. இதனால் குழப்பத்தில் உள்ளது அதிமுக தலைமை..

பரிசீலனை

பரிசீலனை

ஏற்கனவே சசிகலா விஷயத்தில் தாறுமாறாக சிவி சண்முகம் பேசி வருகிறார்.. எதையாவது எடக்கு மடக்காக பேட்டி தந்து சர்ச்சையிலும் சிக்கி கொண்டும் வருகிறார்.. பிறகு தன் உயிருக்கு ஆபத்து ஸ்டேஷனுக்கும் புகார் கொடுக்கவும் ஓடுகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், ஏழுமலை சொன்ன இந்த விவகாரங்களை எல்லாம் கட்சி தலைமை எந்த அளவுக்கு பரிசீலிக்கும் என்று தெரியவில்லை.. பார்ப்போம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+