என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுகவின் அதிரடி நடவடிக்கைகளால் அதிமுக ஆடிப்போயுள்ளது. இந்நிலையில் காலி நாற்காலிகளுடன் நடைபெற்ற அதிமுக கூட்டத்தை பார்த்து மேடையில் பேசிக் கொண்டிருந்த கௌதமி அப்செட்டாகி குமுறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. திமுக, அதிமுக 2 கூட்டணிகளிலும் தெருமுனை பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. [ADMK Meeting]

காலி நாற்காலிகள்
கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும், தமிழ்நாட்டையே பாதுகாக்கும் அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்கள் வாக்கு தான் அது.
உங்கள் கையில் உள்ள வாக்கு தான் உங்கள் உரிமை. அதை அதிமுகவுக்கு அளித்தால் தமிழ்நாடு பாதுகாக்கப்படும். செய்வீர்களா. செய்வீர்களா.." என்று ஜெயலலிதா பாணியில் கூட்டத்தை பார்த்து கேட்டார். ஆனால் அப்போது பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்தன. விரல் விட்டு எண்ணுமளவுக்கு தான் மக்கள் கூட்டம் இருந்தது. இதனால் கௌதமி பேசும்போது கூட்டத்தில் இருந்து ஆரவாரமாக பதில் வரவில்லை.
கௌதமி வேதனை
இதைப் பார்த்த அப்செட்டான கௌதமி, "கூட்டத்தை ஆரம்பிச்சதை விட இப்போதுள்ள எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இது நியாயமானதுதான். வீட்டிற்கு திரும்பியவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களின் உழைப்பு மற்றும் கஷ்டம் எனக்கு நன்றாகவே தெரியும்" என்று பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அவர்களை போலவே அதிமுக கூட்டங்களும் காலி நாற்காலிகளுடன் நடக்கின்றன என திமுகவினர் கலாய்த்து வருகிறார்கள்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications