அந்த "அமைச்சர்".. தினகரனை சந்தித்தாராமே.. உண்மையா?.. பரபரக்கும் வதந்தி!
அமைச்சர் வளர்மதிக்கு தேர்தலில் வாய்ப்பு தரவில்லை
சென்னை: சீட் கிடைக்காத நிலையில், பலரும் மாற்று கட்சிகளை குறி வைத்து வருகின்றனர்.. அந்த வகையில், அமைச்சர் ஒருவர், டிடிவி தினகரனை சந்தித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வலம் வருகின்றன.
தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் லிஸ்ட்டை அறிவித்து வருகின்றன.. அதில், எதிர்பார்த்த சிலருக்கு சீட் கிடைத்துள்ளது.. சிலருக்கு கிடைக்கவில்லை.. சிலர் புதுமுகங்களாக உள்ளனர்.. பலர் வாரிசுகளாக உள்ளனர்.
இப்படி பலவிதமாக கலந்து லிஸ்ட்கள் வந்துள்ளன.. இதனால், எதிர்பார்த்து சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்..

வளர்மதி
இதனால் எனினும் அடுத்த முறை வாய்ப்பு தருவார்கள் என்று சிலர் தேற்றி கொண்டுள்ளனர்.. மேலும் சிலரோ மாற்று கட்சிக்கு தாவலாமா என்ற யோசனையில் உள்ளளனர். அந்த வகையில் அதிமுகவில் 2 பெண்கள் அமைச்சர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.. ஒருவர் நிலோபர் கபில், மற்றொருவர் வளர்மதி.. இதில், நிலோபர் கபில், தன் தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாகவே தனக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதாக வருத்தத்துடன் சொல்லினார். ஆனால், வளர்மதிக்கு ஏன் சீட் தரவில்லை என்று காரணம் தெரியவில்லை.

2 முறை சீட்
ஜெயலலிதாவால் 2 முறை சீட் வழங்கப்பட்ட வளர்மதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டபோது, அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது... இதனால் ஸ்ரீரங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா, வளர்மதிக்கு தான் வாய்ப்பு வழங்கினார்... இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்....

வாய்ப்பு
இதற்கு பிறகு, 2016 தேர்தலிலும் வளர்மதிக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா.. இறுதியில் அமைச்சர் பதவியும் தந்தார். இந்த முறை சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறாராம் வளர்மதி.. அதனால், ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் வளர்மதி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது.. எனினும் அதிமுக வட்டாரத்தில் இதுபற்றி எந்த பேச்சும் எடுக்கவில்லை..

தினகரன்
இதற்கு பிறகு மறுபடியும் ஒரு தகவல் வெளியானது. இவர், டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதான் அதிமுக வட்டாரத்தை லேசாக கலக்கத்தில் தந்துள்ளதாகவும், அதனால், ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் வேட்பாளர் மாற்றம் இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications