ஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்
Recommended Video
சென்னை: சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி சிவக்குமார் இல்லத் திருமண விழா அழைப்பிதழில் ஓ.பி.எஸ்.படம் இடம்பெறாதது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியை பொறுத்தவரை அவர் தான் முடிவெடுக்கக்கூடிய தலைமை இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கட்சி புரோட்டகால் படி அதிமுக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் தவறாமல் இடம்பெறுவது வழக்கம்.

ஆனால் சேலம் வீரபாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.மனோன்மணி சிவக்குமார், தனது இல்லத்திருமண விழா அழைப்பிதழில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் படத்தை தவிர்த்துள்ளார். இது அதிமுகவில் விவாதப் பொருளாக உள்ளது. ஏற்கனவே ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என குண்டை வீசியிருந்தார்.
இந்நிலையில், இந்த அழைப்பிதழ் விவகாரமும் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நமக்கு இந்த அழைப்பிதழ் தொடர்பான படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய அதிமுகவை சேர்ந்த அந்த நிர்வாகியிடமே இது குறித்து பேசினோம், என்ன தான் எம்.எல்.ஏ. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஓ.பி.எஸ்.அண்ணன் படத்தையும் போட்டு இருக்கனும்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஒற்றுமையாக இணைந்து செயலாற்றி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இருவருக்கும் இடையே மனகசப்பை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் தன்னை போன்ற கட்சி விசுவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய்












Click it and Unblock the Notifications