திருவாளர் துண்டுச்சீட்டு... ஸ்டாலினை தாக்கி நமது அம்மா நாளிதழ் விமர்சனம்
Recommended Video
சென்னை: தேர்தல் வந்தால் மக்களை ஜாதி கூறுகளாக பார்த்து நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்கிற வேலையை திமுக வெட்கம் இல்லாமல் செய்வதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சித்துள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்தது. அவர் மறைவுக்கு பிறகு நடந்த அரசியல் கலாட்டாவில் நமது அம்மா என்ற நாளிதழ் அதிமுகவுக்காக தொடங்கப்பட்டது. அதற்கு மருது அழகுராஜ் என்பவர் ஆசிரியராக உள்ளார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கருத்துக்களை கவிதை நடையாகவும் , தலையங்கம் வழியாகவும் நமது அம்மா நாளிதழ் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று அடகு வைத்த நகையும், இட ஒதுக்கீடு வலையும் ;என்ற தலைப்பில் நமது அம்மாவில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில், வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஒரு கணமும் யோசிக்காமல் அள்ளிவிடுவது, ஆசை வலை விரிப்பது மதிகெட்ட திமுகவுக்கு தேர்தல் விதியாகவே போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அடகுவைத்த 5 சவரன் நகையை திருப்பி தருவோம், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என அள்ளிவிட்ட பொய்களை என்னாச்சு என மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில், திருவாளர் துண்டுச்சீட்டு இட ஒதுக்கீடு என்ற புதிய வலையை விரிக்க பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போகவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வர வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைமைகள் கட்சி நாளேடு வாயிலாக எதிர்க்கட்சிகள் பற்றி கடும் விமர்சனத்தை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications