Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான் "மேலிடம்".. பாஜகவை நாடும் எடப்பாடி? என்னவாம்

டெல்லி மேலிடத்தை பகைத்துக் கொண்டு எடப்பாடியால் அரசியல் செய்ய முடியாதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி, கட்சி விவகாரத்தில் சட்டரீதியான முடிவை எதிர்நோக்கி இருந்தாலும், மேலிட பாஜகவுடன் அவருக்கான அரசியல் உறவு தொடரவே செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் அறுதியிட்டு சொல்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம்?

Recommended Video

    Sasikala, Dinakaran இணைய வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம் - Manoj Pandian *Politics

    கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன.

    இந்த தீர்ப்பு வெளியாகிய நிலையில்தான், கூட்டுத்தலைமையோடு மறுபடியும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார்.

    கறார்தன்மை

    கறார்தன்மை

    ஆனால், அந்த வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாகவும் சொல்லிவிட்டார்.. ஓபிஎஸ் தனக்கு, அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்... இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எடப்பாடி பழனிசாமி பெரிதும் நம்பி உள்ளார். ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் டீமுடன் தொடர்ந்து ஆலோசித்தும் வருகிறார்.. இதையடுத்து, ஓபிஎஸ் பெற்ற தீர்ப்பில் தடை வாங்கலாம் என்றும் கணக்கு போட்டு வருகிறாராம்.

     வக்கீல் டீம்

    வக்கீல் டீம்

    அதேசமயம், டெல்லி மேலிடத்தை பொறுத்தவரை, அதிமுக விஷயத்தில் இதுவரை தலையிடவில்லை.. நீதிமன்றத்துக்கு செல்லும் முன்பேயே, இவர்களின் பஞ்சாயத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை.. இருவரையும் அழைத்து பேசவில்லை.. சமாதானமும் செய்யவில்லை.. இரு தரப்புமே தங்களுக்கு வேண்டும் என்று சொல்லி வருகிறதே தவிர, யாருக்கும் வெளிப்படையாக ஆதரவும் தரவில்லை.. எதிர்ப்பும் காட்டவில்லை.. அமைதியாக நின்று ஒதுங்கி வேடிக்கை பார்த்து வருகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை எந்த நிலையிலும் கைவிடாது என்பதும், அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

     3வது டீம்

    3வது டீம்

    அப்படியானால், எடப்பாடியை, டெல்லி மேலிடம் கைவிட்டுவிட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.. கிட்டத்தட்ட இந்த செய்தி உண்மை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. எடப்பாடியின் ஆளுமை + மெஜாரிட்டி ஆதரவு + வலுவான தலைவர் இப்படி எதையுமே பாஜக விரும்பாத நிலையில், எடப்பாடி டீமின் தலையில் கொட்டி, தங்கள் கன்ட்ரோலில் இழுத்து பிடித்து வைக்கவே பாஜகவின் அரசியல் என்றும் சொல்கிறார்கள்.. ஒருவேளை இதற்கு எடப்பாடி டீம் ஒத்துவராத பட்சத்தில், அவரை கழட்டிவிட்டு, புது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கவும் மேலிடம் ரெடியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்..

     டிடிவி + சசிகலா + ஓபிஎஸ்

    டிடிவி + சசிகலா + ஓபிஎஸ்

    டிடிவி தினகரன் + சசிகலா + ஓபிஎஸ் இவர்களை இணைத்துக் கொண்டு, கூட்டணி தலைமையேற்று, எம்பி தேர்தலை சந்திக்க நிறையவே வாய்ப்புள்ளது.. ஆனால், எடப்பாடியின் நிலைமை அப்படி கிடையாது.. ஏராளமான வழக்கு விசாரணைகளில் பின்னி பிணைந்துள்ளது எடப்பாடி டீம்.. மாநிலத்தில் திமுக + மத்தியில் பாஜகவை வைத்து கொண்டு, இவைகளில் இருந்து வெளியே வருவது அவ்வளவு சுலபம் கிடையாது.. எனவே, பாஜக மேலிடத்தின் பாதுகாப்போடுதான், தன்னுடைய அரசியலை எடப்பாடியால் நடத்த முடியும் என்ற நிலைமை உள்ளது என்கிறார்கள்.

     இலை + தலை

    இலை + தலை

    அத்துடன், இரட்டை இலையை விட்டுவிடவும் முடியாது.. ஆதரவாளர்கள் பலம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த இலை இருந்தால்தான், தொண்டர்களிடம் அவருக்கான மவுசு கூடும்.. மேலும், 2024 எம்பி தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாடு சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும்.. இந்த 3 விஷயத்திலும் டெல்லியை தான் எடப்பாடி பழனிசாமி மலையென நம்பி உள்ளார்.. அதனால், பாஜகவை எடப்பாடியால் பகைத்துக் கொள்ள முடியாது.. 5 வருட ஆட்சியில் இருந்தபோதுகூட, பாஜகவை அவர் விமர்சிக்கவில்லையே.. இந்த திமுக ஆட்சியில்கூட பாஜகவை அவர் விமர்சிக்கவில்லையே என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

     ஆதங்கமும், பதற்றமும்

    ஆதங்கமும், பதற்றமும்

    நடுநடுவே, பெயரளவுக்கு ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு குறித்து அறிக்கைகள் வெளியிட்டாரே தவிர, அவை ஒன்றும் வலுவான அறிக்கைகள் கிடையாது.. இது பாஜகவுக்கும் நன்கு தெரியும்.. அதுவும் இல்லாமல் பாஜகவை எதிர்க்கும் முறை என்பது இது கிடையாது.. எனவே, கட்சிக்குள் ஓபிஎஸ்ஸையும் சரி, அரசியலுக்கு பாஜகவையும் சரி, இவர்கள் சொன்னதை கேட்டு நடக்கும் நிலைமைதான் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.. அந்த ஆதங்கமும், கொந்தளிப்பும்தான், தன்னுடைய பேட்டிகளில் பதற்றமாக வெடித்து வெளியே வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

    ஆசை ஆசையாய்.

    ஆசை ஆசையாய்.

    இதனிடையே ஓபிஎஸ்ஸின் ஒரு டீம், எடப்பாடிக்கு எதிரான பிரச்சாரங்களை இணையத்தில் முன்னெடுத்து வருகின்றன.. பதவியை மொத்தமும் அனுபவித்தவர் எடப்பாடி மட்டுமே.. தலைமை நிலைய செயலாளர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் பதவி, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்திவிட்டு, அனைத்து பதவியையும் அனுபவித்தவர் எடப்பாடி.. ஆனால், இன்று பதவி ஆசை, சுயநலம் என்று ஓபிஎஸ்ஸை பார்த்து பேசுவது எந்த வகையில் நியாயம்? தொண்டர்கள் பெயரை சொல்லி ஏமாற்றுகிறார் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனராம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+