ஓஹோ.. இதான் காரணமா.. ஓபிஎஸ்ஸின் திடீர் புகழ்ச்சி.. என்ன செய்ய போகிறார் எடப்பாடி.. சக்சஸ் திமுக?

ஓபிஎஸ்ஸின் திடீர் புகழ்ச்சி நிறைய கேள்விகளை எழுப்பி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம் துரைமுருகன், இன்று கருணாநிதி என இருவர் குறித்த தீர்மானத்திலும் எடப்பாடி பழனிசாமி பேசாமல் பேசாத நிலையில், ஓபிஎஸ் மட்டுமே தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்... இதற்கான காரணங்கள் என்ன? மாற்றங்கள் என்ன?

Recommended Video

    என் தந்தை கலைஞரின் தீவிர பக்தர்….. கலைஞர் நினைவிட அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு!

    நன்றாக கவனித்தோமானால் ஒரு விஷயம் நமக்கு புலப்படும்.. இந்த கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் ஆரம்பித்ததில் இருந்தே, எடப்பாடியிடம் இருந்து ஓபிஎஸ் சற்று விலகியே காணப்படுகிறார்..

    இதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ஜெ.மறைவிற்கு பிறகு முதல்வர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கப்பட்ட பிறகு, எடப்பாடி அரசின் எதிர்க்கட்சி தலைவராகவேவே மாறிவிட்டார் ஓபிஎஸ்..

     சம்பவங்கள்

    சம்பவங்கள்

    அதற்கு சாட்சியாக எத்தனையோ சம்பவங்கள் இந்த 4 வருடத்தில் நடந்துள்ளன.. எடப்பாடி பழனிசாமியை அவர் விமர்சித்தது, இரட்டை தலைமை விவகாரம், தேனி பண்ணை வீட்டிற்கு கோபித்து கொண்டு போனது, அவரை சமாதானப்படுத்த மூத்த அமைச்சர்கள் பின்னாடியே ஓடிச்சென்றது, என எத்தனையோ நிகழ்வுகளை இந்த நாடு பார்த்துள்ளது.

     காவலாளி

    காவலாளி

    இதில் ஒன்றுதான் ஓபிஎஸ் 2017, 23ம் தேதி வெளியிட்ட அறிக்கை.. அதாவது, ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், இக்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்'' என்று காட்டமாக சொல்லி இருந்தார்.

     கொடநாடு

    கொடநாடு

    அதுமட்டுமல்ல, இதனால், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகி உள்ளது.. 4 நாளைக்கு முன்பு கொடநாடு விவகாரத்தை திமுக கையில் எடுக்கவும், அதிமுக வெளிநடப்பு செய்து தர்ணாவும் நடத்தியது...

     டென்ஷன்

    டென்ஷன்

    அப்போது எடப்பாடி பழனிசாமி உச்சக்கட்ட பதற்றத்தில் இருந்தாலும், ஓபிஎஸ்ஸிடம் அந்த அளவுக்கு டென்ஷன் காணப்படவில்லை.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் மட்டும் கருப்பு பேட்ஜ் அணியாமல் இருந்தது நிறைய சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியது.. அன்றைய தினமே ஆளுநரை சந்தித்த நிலையில், அதற்கு பிறகு ஓபிஎஸ் நடவடிக்கையில் மாற்றம் வெளிப்படையாகவே தென்பட துவங்கி விட்டது.

    குற்றவாளி

    குற்றவாளி

    கொடநாடு கொலை, கொள்ளைக்கு பின்புலம் ஈபிஎஸ்தான் என்று வழக்கில் முக்கிய குற்றவாளியே கூறியிருப்பது ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமல்ல அதிமுக வட்டாரத்துக்கே அதிர்ச்சிதான்.. இப்போது இந்த விவகாரத்தை திமுகவைவிட காங்கிரஸ் மிக தீவிரமாக கையில் எடுத்துள்ளது.. நேற்றைய பேரவை கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.. மாறாக, தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் அறையில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    துரைமுருகன்

    துரைமுருகன்

    அதேசமயம், ஓபிஎஸ் பேரவையில் கலந்து கொண்டார்.. நேற்று அளவுக்கு அதிகமாகவே துரைமுருகனை பாராட்டினார்.. 50 வருடங்களாக எல்லாருடைய மனதையும் கவர்ந்தவர் துரைமுருகன்... சூடாக பேசுவார், உடனே அடுத்த விநாடியே இனிமையாக பேசும் ஆற்றல் கொண்டவர்.. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன் என்று புகழாரம் சூட்டியது நிச்சயம் எடப்பாடிக்கு நேற்றைய தினம் கடுப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றே தெரிகிறது.

     மனோகரா

    மனோகரா

    இன்றைய தினமும் ஓபிஎஸ் பேசும்போது, கருணாநிதியை பாராட்டி பேசினார்.. "என் அப்பாவின் பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள்தான் இருக்கும்... அதையெல்லாம் மனப்பாடமாக ஒப்பிப்பார்.. அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து அந்த வசனங்களை படித்துள்ளோம்... கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி... வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    தீர்மானம்

    தீர்மானம்

    இதற்கெல்லாம் என்ன காரணம்? எடப்பாடி விவகாரத்தில் ஓபிஎஸ் என்ன முடிவில் இருக்கிறார்? நேற்று துரைமுருகன், இன்று கருணாநிதி.. இருவர் குறித்த தீர்மானத்திலும் இபிஎஸ் பேசவில்லை என்பதுடன், ஓபிஎஸ் மட்டுமே பேசி உள்ளார், அதுவும் பாராட்டி புகழ்ந்துள்ளார்.. இது 2 விதமான சந்தேகங்களை நமக்கு ஏற்படுத்தி உள்ளது.. ஒன்று ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி பயணிக்கிறாரா? அல்லது ஓபிஎஸ்சின் இந்த புது பாணி பயன் தருமா? என்பதுதான்.

     மாற்றம்?

    மாற்றம்?

    எடப்பாடியை பொறுத்தவரை கொடநாடு விவகாரத்தில் கலங்கி போயுள்ளார்... திமுகவின் செயல்பாடுகள் ஒருபக்கம் இருந்தாலும், நீதிமன்ற செயல்பாடுகள் மிச சரியான திசையிலேயே சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. கொடநாடு தொடர்பாக அடுத்தடுத்த மேல்முறையீடுகளும் சென்னை ஹைகோர்ட்டில் குவிந்து வருகின்றன.. எல்லாவற்றிற்கும் மேலாக, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்ற அளவுக்கு விவகாரம் முற்றிவிட்டது. இவ்வளவு இடியாப்ப சிக்கல்களில் இருந்து எடப்பாடி பழனிசாமி தன்னை விடுவித்து கொண்டு வெளியே வர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்.

    திமுக

    திமுக

    மற்றொருபுறம், ஓபிஎஸ் அணுகுமுறை எந்த அளவுக்கு அவருக்கும், அதிமுகவுக்கும் சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை.. இந்த முறை திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே, முதல்வர் ஸ்டாலினுடன் நல்ல இணக்கமான போக்கையே கையாண்டு வருகிறார்.. எத்தனையோ முறை முதல்வரின் பல அறிவிப்புகளுக்கு பாராட்டி உள்ளார்.. மனம் திறந்து நன்றி சொல்லி உள்ளார்..

     மா.சுப்பிரமணியன்

    மா.சுப்பிரமணியன்

    அதற்கேற்றபடி ஓபிஎஸ்ஸையும் திமுக தரப்பு மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறது.. "துணை முதல்வர் ஓபிஎஸ்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னுடைய பேட்டிகளில் சொல்வதே இதற்கு சாட்சி. அதேசமயம், பாஜகவையும் கொடநாடு விவகாரத்தில் பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றும் முயற்சியில் பாஜக இப்போதுவரை ஈடுபடவில்லை, அதை விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது..

     எடப்பாடி

    எடப்பாடி

    ஆனால், இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடியை விட்டுவிட்டு, தங்களின் ஆல் டைம் ஆதரவு நபரான ஓபிஎஸ்ஸுக்கு, மேலான ஆதரவை தந்து, இந்த முறை தேர்தல்களை சந்திக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.. ஆக மொத்தம், திமுகவுடன் ஓபிஎஸ்ஸின் இணக்கம் நல்ல மாற்றங்களை பெற்று தருமா? பாஜகவுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+