இது யார்னு தெரிகிறதா.. என்ன கூட்டம்னு பார்த்தீங்களா.. மாஸ்க்கும் இல்லை.. சோசியல் டிஸ்டன்ஸும் இல்லை!
விதிகளை மீறி திருப்பத்தூரில் அதிமுக கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது
சென்னை: இது யார்னு பார்த்தீங்களா? என்ன கூட்டம்னு தெரியுதா? மாஸ்க் இல்லை.. சோஷியல் டிஸ்டன்ஸ் இல்லை.. இப்படி ஒரு கூட்டத்தை அதிமுக அமைச்சர் நடத்தி உள்ளார்.. இது சர்ச்சையாக வெடித்துள்ளது.
கொரோனா காலத்துல, விதிகளை மீறி நடந்த, ஒரு அமைச்சர் வீட்டு கல்யாண விவகாரமே, ஓயாத நிலையில், இன்னொரு கல்யாண விவகாரம் மதுரை மாவட்டத்தில் நடந்தது.

அலங்காநல்லுார், அதிமுக ஒன்றிய செயலர் மகனுக்கு, கல்லணையிலுள்ள, அவரது வீட்டில், தடபுடலாக கல்யாணம் நடந்தது.. 50 பேருக்கு மேல பங்கேற்கக் கூடாதுன்னு, அரசு உத்தரவு போட்டால், அந்த கல்யாணத்துல ஆயிரத்துக்கும் மேல மக்கள் திரண்டிருந்தாங்க.. இதுல பிரியாணி விருந்து வேற நடந்தது.
இப்போது அமைச்சர் கே.சி.வீரமணி ஒரு மீட்டிங்கை இப்படி நடத்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார்... வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சியும் ஆலோசனை கூட்டமும் நேற்று நடந்துள்ளது.
அமைச்சர் கேசி வீரமணி தலைமை இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்தார்.. ஆனால், சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான நிலோபரை இந்த கூட்டத்துக்கு அழைக்கவில்லையாம். இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், பேரூர், ஊராட்சி, நகராட்சி என 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு வந்துவிட்டனர்.. சமூக இடைவெளியை கொஞ்சமும் பின்பற்றாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டதாம்.. ஆனால், அமைச்சர் பங்கேற்ற கூட்டம் என்பதால் நடவடிக்கை எடுக்க யாரும் முன் வரவில்லை என்கிறார்கள். "ஊரடங்கு விதிகள் எல்லாம், பொது ஜனங்களுக்கு தான் போல, ஆளுங்கட்சியினருக்கு இல்லையா" என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications