ஒருபோதும் "தோப்பு".. தனிமரம் ஆகாது.. "நான் என்ன தப்பு செஞ்சேன்".. விம்மி அழுது.. மிரண்டு போன அதிமுக
எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தி எம்எல்ஏக்களால் சிக்கல் கூடுகிறது
சென்னை: அதிமுகவின் முக்கிய புள்ளி ஒன்று சசிகலா பக்கம் தாவ இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால், அதிமுக தலைமை சற்று அப்செட் ஆகி உள்ளதாகவே தெரிகிறது.
பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு கே வெங்கடாசலம்... ஜெயலலிதா காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்கவர்.. கட்சியல் சீனியர்.. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தோப்பு வெங்கடாசலத்துக்கு பல பொறுப்புகளை தந்து அழகு பார்த்தவர்.
அவர் மறைவுக்கு பிறகு அமைச்சர் பதவிக்காக முயன்றார்.. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அதனால் எம்பி தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் கூட செய்திகள் பரபரத்தன.

தோப்பு வெங்கடாசலம்
இருந்தாலும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எம்பி தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது.. இதற்கு முழு காரணம், தோப்பு வெங்கடாசலத்தின் கடின உழைப்புதான்.. அது மட்டுமில்லை... தொகுதிக்குள் இவர் செய்த நலத்திட்டங்கள், மக்களிடம் பழகும்முறை, உள்ளிட்டவைகளால்தான் பெருந்துறையின் பெரும்பாலான வாக்கு சதவீதத்தை தன்னிடம் தக்க வைத்து கொண்டுள்ளார் என்பதை நாம் மறுக்க முடியாது.

கருப்பண்ணன்
எனினும் கடந்த சில வருடங்களாகவே இந்த தொகுதியில் உட்கட்சி பூசல் நிலவி கொண்டிருக்கிறது.. அமைச்சர் கருப்பண்ணனுடனான மோதலும் நீடித்து கொண்டே வருகிறது.. அன்று, தோப்பு வெங்கடாசலம் கையில் இருந்த சுற்றுச்சூழல் துறையானது, பறிக்கப்பட்டு கருப்பண்ணனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது... அப்போது முதலே இந்த முட்டல் மோதல்கள் குறையாமல் உள்ளன.. இதனால் ஒருகட்டத்தில், கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதமும் எழுதியிருந்தார்.

சீட்
இதனிடையே இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார்.. ஆனால், தோப்புக்கு சீட் தர போவதில்லை என்ற விஷயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கசிந்தது.. இதனால் அதிர்ந்து போன தோப்பு, சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, இந்த அதிருப்தியால் சசிகலா பக்கமும் அவர் எந்நேரமும் தாவக்கூடும் என்றும் எனவே, தோப்பு வெங்கடாசலத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க உளவுத்துறைக்கு உத்தரவு பறந்தன என்றும் தகவல்கள் பரபரத்தன. எனவே, அவரை சமாதானப்படுத்த கட்சி தலைமை இறங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆதரவாளர்
கடைசியில் அப்படி எதுவுமே நடக்கவில்லை.. கருப்பணன் ஆதரவாளரான ஜெயகுமாருக்கு சீட் தந்துள்ளனர்.. இதனால், மேலும் அதிர்ந்து போன தோப்பு வெங்கடாசலம், நான் என்ன தப்பு செய்தேன் என்று கதறி கதறி அழுதார்.. ஒருகட்டத்தில் இந்த கட்சியை விட்டே போய்விடலாம் என்றுகூட முடிவு செய்ததாக தெரிகிறது..

கேகேசி பாலு
இந்நிலையில் வேறு ஒரு தகவல் கூறப்படுகிறது.. அதாவது, பெருந்துறையில், திமுக கூட்டணியில் போட்டியிடும், கொங்கு மண்டல தேசிய கட்சி வேட்பாளர் கேகேசி பாலு.. இவர் தோப்பு வெங்கடாசலத்தின் சொந்தக்காரராம்.. இந்த முறை தோப்பு போட்டியிடாததால், நிச்சயம் அவரது ஓட்டுக்கள் எல்லாம் மொத்தமாக ஷிப்ட் ஆகி ஜெயக்குமாருக்கு விழும்.. அதன்மூலம் தான் எளிதாக வெற்றி பெறலாம் எனறு கொமதேக நினைத்தது..

அதிமுக
ஆனால், தோப்பு இங்குதான் திறன்பட செயல்பட்டுள்ளார்.. திடீரென சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துவிட்டார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "நான் என்ன தப்பு செய்தேன் என்று தெரியவில்லை.. கட்சியில் இருந்து எனக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்டாலும், என் மீது அன்பு கொண்ட தொகுதி மக்கள் அவர்களாக முன்வந்து நான் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இப்போதும் நான் அதிமுகவில் இருக்கிறேன்.

தர்மம்
நான் ஒன்றும் கட்சிக்கு எதிராக செயல்படவோ, வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்கவோ, கட்சி மாறவோ இல்லையே.. என்னை நம்பிய பெருந்துறை தொகுதி மக்களுக்கு நான் செய்ய வேண்டிய பணி இருக்கிறது. இந்த தொகுதிக்கு யார் எம்எல்ஏவாக வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும்" என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் பெருந்துறை அதிமுக கூடாரமே அதிர்ந்து போய்விட்டது.. நிச்சயம் 10 ஆயிரம் ஓட்டுக்களையாவது தோப்பு பிரிப்பார், இதுவரை தொகுதிக்குள் தோப்பு வெங்கடாசலம் செய்த தர்மம், நிச்சயம் அவருக்கு கை கொடுக்கும் என்றே தெரிகிறது.. பார்ப்போம்..!
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications