மிரட்டும் மின்வெட்டு! கொதிக்கும் மக்கள்! ஆர்ப்பாட்டம் நடத்தும் ஐடியாவில் அதிமுக! அடுத்தது என்ன?
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக மின் வெட்டு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் ஒரு கொதிநிலை உருவாகியிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டசபையில் சவால் விடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிய பிறகு தான் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
இதனிடையே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மின்வெட்டு விவகாரத்தை மையமாக வைத்து தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் ஐடியாவை வகுத்து வருகிறது.

மின் வெட்டு
தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த 4 நாட்களாகவே நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களை காட்டிலும் ஊரகப்பகுதிகளில் இந்தப் பிரச்சனை அதிகம் உள்ளது. குறிப்பாக மாணவர்கள் பள்ளி முடித்து வீடு திரும்பும் நேரங்களிலும், மாலை வீட்டுப்பாடம் படிக்கும் நேரங்களிலும், இரவு தூங்கும் நேரங்களிலும் மின்தடை செய்யப்படுகிறது.

கிராமப்புறங்கள்
மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வரவில்லை என என்னதான் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தாலும் கூட அதை கிராமப்புற மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதனிடையே போதாகுறைக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கோடைக்காலத்திற்கான முறையான முன்னேற்பாடுகளையும், திட்டமிடலையும் மின்சாரத்துறை செய்யவில்லை என குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம்
இதனால் இந்தப் பிரச்சனை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய அவரும் ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். இதனிடையே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மின் வெட்டை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறதாம்.
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அடிக்கடி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என நடத்தி கட்சியை ஆக்டிவாக வைத்திருந்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்நிலையில் இன்று தாமும் அதேபோல் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி கட்சியை ஆக்டிவாக வைத்துக் கொள்வதுடன் மின் வெட்டு விவகாரத்தில் மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்யவும் திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே சட்டசபை நடைபெற்று வருவதால் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் அதிமுக மேலிடத் தரப்பில் எடுக்கவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications