ஒரே போடு போட்ட சீனியர்.. "உங்களுக்கு எதிராகவும்".. ஷாக் ஆன பாஜக.. கடுப்பில் அதிமுக.. யார் டார்கெட்?
பாஜகவை கண்டித்தும் போராட்டம் செய்வோம் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்
சென்னை: திமுக அரசு மீது குறையை தெரிவித்து, இன்றைக்கு அதிமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறது.. இந்நிலையில் அதிமுகவின் சீனியர் ஒருவர் சர்ச்சையான கருத்தை தெரிவித்து, அதிமுகவையும் பாஜகவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.
தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதுவுமே திமுக செய்யவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அதிமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.. ஆட்சி ஆரம்பித்து முழுசா 3 மாசம்கூட முடிவடையாத நிலையில், இந்த காரணத்தை 10 வருடம் ஆண்ட அதிமுக தெரிவித்துள்ளது.
அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியே பல வருடம் ஆகிறது.. நீண்ட வருடம் கழித்து முதல் போராட்டம் என்பதாலும், அதுவும் திமுகவை கண்டித்து நடத்தும் ஆர்ப்பாட்டம் என்பதாலும் மிகுந்த கவனத்தை இது பெற்றுவருகிறது.

வார்னிங்
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.. மத்திய அரசும் கர்நாடகாவின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும்'' என்று வார்னிங் தந்து பேசியுள்ளார்.

பாஜக
இதைக் கேட்டு பாஜக ஷாக் ஆகி உள்ளது.. அதிமுகவே ஆடிப்போய் உள்ளது.. வைத்திலிங்கம் எதற்காக பாஜகவுக்கு எதிராக பேச வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.. பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணிகள்தான் கடந்த 10 வருடமாக போராட்டம் செய்து வரும் நிலையில், தங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவை அதிமுக எதிர்க்க என்ன காரணம்? என்ற சந்தேகமும் எழுகிறது.

எடப்பாடி பழனிசாமி
ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல்தான், ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் டெல்லி மேலிடத்தை சந்தித்து விட்டு வந்துள்ளனர்.. இவர்கள் எதற்காக டெல்லி போனார்கள் என்ற உறுதியான தகவல் இதுவரை வெளிவராத நிலையில், வைத்திலிங்கத்தின் பேச்சு, கட்சிக்குள்ளேயே கலக்கத்தை தந்துள்ளது.. உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.. எம்பி தேர்தலை பாஜக அளவுக்கு அதிகமாக நம்பி உள்ளது.. அதிலும் அதிமுகவைதான் நிறைய நம்பி இருக்கிறது.

சீனியர்
அதை மனதில் வைத்தே, அதிமுகவின் பஞ்சாயத்துக்களுக்கும் சில தீர்வுகளை சொல்லி வருகிறது.. இப்படி ஒரு சூழலில் ஆளும் பாஜகவையே அதிமுக எதிர்ப்பது என்பது நடக்காத விஷயம் என்று தெரிந்தும், வைத்திலிங்கம் ஏன் இப்படி பேச வேண்டும்? என்பதுதான் சிக்கலாக உருவெடுத்துள்ளது. வைத்திலிங்கத்தை பொறுத்தவரை கட்சியின் சீனியர்.. ஆனாலும் அதிமுக மேலிடத்தின் மீது அதிருப்தியில் உள்ளவர்.. அதேசமயம், சசிகலா தரப்புடன் நெருக்கம் காட்டி வருபவர்..

அதிருப்தி
ஒருவேளை இந்த ஆர்ப்பாட்டத்தையே சாக்காக வைத்து, அதிமுக மீதான தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த இப்படி பேசியிருக்கிறாரா? அல்லது பாஜக தலைமைக்கு அதிமுக தலைமை மீது அதிருப்தி வரவேண்டும் என்பதற்காக இப்படி பேசியிருக்கிறாரா? அல்லது ஒரு ராஜ்ய சபா சீட்டை எல். முருகனுக்கு தர வேண்டும் என்று பாஜக தரப்பு, அதிமுக மேலிடத்திடம் வாய்மொழியாக கேட்டு கொண்டதால், ஆதங்கத்தில் இப்படி பேசியிருக்கிறரா? தெரியவில்லை.

அதிர்ச்சி
அதேசமயம், இது வைத்திலிங்கத்தின் தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம்.. ஆனால், ஒட்டுமொத்த அதிமுகவும் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யும்போது, பாஜகவுக்கு எதிரான கருத்தை இவர் முன்வைத்தது, எதற்கான சமிக்ஞை? என்று தெரியாமல் அதிமுக கடுப்பாகி உள்ளது.. பாஜகவோ, அதற்கு மேல் ஷாக் ஆகி உள்ளது..!












Click it and Unblock the Notifications