சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மாஜி அமைச்சர்கள்.. திமுக பக்கம் வரப்போகிறார்களாமே.. குறுக்கே வரும் பாஜக.. பரபரக்கும் களம்..!

மாஜி அமைச்சர்கள் திமுகவில் இணைவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.. அதன் தொடர்ச்சியாக சில மாஜிக்கள் திமுகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

கொங்கு மண்டலம் எப்போதுமே திமுகவுக்கு எப்போதும் சவாலாக இருந்து வருகிறது.. 10 வருடங்களுக்கு முன்பு திமுகவை ஆட்சி பீடத்தில் ஏற முடியாத அளவுக்கு சறுக்கிவிட்டது கொங்கு மண்டலமும் மேற்கு மண்டலமும்தான்..

இந்த முறை ஜஸ்ட் பாஸ் என்ற அளவில் கொண்டுபோய்விட்டதும் இதே பகுதிகள்தான்.. குறைந்தபட்சம் மேலும் 20 தொகுதிகளிலாவது திமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் இப்போதுவரை அக்கட்சிக்கு உள்ளது.

97% அட்டடென்ஸ்.. 75 கேள்விகள்;91 விவாதங்கள்..நாடாளுமன்றத்தை கலக்கிய திமுக எம்.பி.. ஸ்டாலின் பாராட்டு97% அட்டடென்ஸ்.. 75 கேள்விகள்;91 விவாதங்கள்..நாடாளுமன்றத்தை கலக்கிய திமுக எம்.பி.. ஸ்டாலின் பாராட்டு

கொங்கு

கொங்கு

எனவே, தோல்விக்கான காரணங்கள் என்ன, யார் யார் காரணம், போன்ற விவரங்களும் பெறப்பட்டு வருகின்றன.. மறுபுறம் விரைவில் எம்பி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ளதால், கொங்குவில் திமுக கொடியை பறக்கவிட பல்வேறு நடவடிக்ககள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது, 50 தொகுதிகளில், 17 இடங்களில் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்றதால், பலவீனமான பகுதிகளை குறி வைத்து களமிறங்கி உள்ளது...

 அமைச்சரவை

அமைச்சரவை

அநேகமாக இந்த வருட கடைசிக்குள் கொங்கு பகுதியை தன் கைக்குள் கொண்டு வரும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மேற்கு மண்டலத்தை பலப்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. காரணம், மேற்கு மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்தும் நோக்கில்தான், ஏற்கனவே அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது..

 அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சக்கரபாணிக்கும் அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர்களே கொங்குமண்டலத்தை கவனித்து கொண்டு வரும்போது, உதயநிதியை இனியும் களமிறக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

 கவுண்டர் சமூகம்

கவுண்டர் சமூகம்

ஆனால், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் 2 பேரை திமுக பக்கம் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது... அந்த 2 பேருமே கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களாம்.. தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்த பிறகுதான், மேலும் 2 பேர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.. எனினும், அவர்கள் யார் என்று தெரியவில்லை...

பாஜக

பாஜக

ஆனால், அவர்களை பாஜக தன் பக்கம் இழுக்க முயன்று கொண்டிருக்கிறதாம்.. முருகனும், அண்ணாமலையும் பாஜகவில் முக்கிய பொறுப்பை பெற்றுள்ள நிலையில், இவர்கள் 2 பேருமே கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், பாஜகவை வளர்க்க அடுத்தடுத்த வியூகங்களில் இறங்கி உள்ளனர்.. அதனால் திமுக குறி வைக்கும், அதே பிரமுகர்களுக்கு பாஜகவும் மறுபக்கம் ஸ்கெட்ச் போட்டு வருகிறதாம்..!

English summary
ADMK two Ex Ministers may join in DMK soon, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X