கட்சி அங்கீகரிக்காதவர்களிடம் கருத்துக் கேட்கக்கூடாது.. ஊடகங்களுக்கு அதிமுக தலைமை கடும் எச்சரிக்கை!
சென்னை: கட்சி அங்கீகரிக்காதவர்களிடம் கருத்துக் கேட்கக்கூடாது என ஊடகங்களுக்கு அதிமுக தலைமை கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுகவில் பெரும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த செய்திகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை கழகம் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என அறிக்கை வாயிலாக உத்தரவிட்டது.

நேற்று கட்சியினருக்கு எச்சரிக்கை
மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் கூற கூடாது என்றும் அறிவுறுத்தியது. அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் கட்சி தலைமை எச்சரித்தது.

இன்று ஊடகங்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் ஊடகங்களுக்கு அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில் கட்சி அங்கீகரிக்காதவர்களிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்கக்கூடாது என தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம்
கட்சி தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக எச்சரித்துள்ளது. சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம் என்றும் அதிமுகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி பொறுப்பேற்க முடியாது
அதிமுக பெயரில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் கொடுக்கும் பேட்டிகள், செய்திகளுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்றும் அதிமுக தலைமைக் கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கழகத்தின் பிரதிநிதிகள் என்றோ அல்லத கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும்படி யாரையும் தங்களின் ஊடகங்களின் வழியாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக என அடையாளப்படுத்த வேண்டாம்
மேலும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அனைத்து இந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் என்று அடையாள படுத்த வேண்டாம் என்றும் அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் கூறுவதை அதிமுக கருத்து என தெரிவிக்க எதிர்ப்பு தெரிவித்து தலைமைக் கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications