பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன்! அத்தனை வழக்குகளில் இருந்தும் ஆம்ஸ்ட்ராங்கை விடுவித்தவர் இவர்தான்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் மறைவைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006 முதல் பகுஜன் சமாஜ் கட்சியில் பணியாற்றி வருபவர் ஆனந்தன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் புதிதாக கட்டி வந்த வீட்டுக்கு அருகிலேயே கடந்த ஜூலை 5 ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மேலும் 3 பேர் அடுத்த நாள் கைதாகினர். மேலும் பலருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்க்கொடி, வழக்கறிஞரும் தமாகா நிர்வாகியாக இருந்தவருமான ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த பெண் தாதா அஞ்சலையும் கைது செய்யப்பட்டார். மேலும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்: இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வகித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக அடுத்து நியமிக்கப்படப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த ஆனந்தன்?: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன். இவரது தந்தை பெயர் பஞ்சாட்சரம், தாயார் பெயர் சரஸ்வதி. 1974 ஆம் ஆண்டு பட்டாபிராமில் பிறந்தவர் ஆனந்தன். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 முதல் 1997 வரை சட்டம் படித்தவர்.
அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார். அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோ அவர்களிடம் ஜூனியர் வழக்கறிஞராக ஆறு மாதம் காலம் பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்களை கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்.
முக்கியமான வழக்குகளில் ஆஜரானவர்: சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களான பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தியவர் பி.ஆனந்தன். தற்போது 26 ஆம் ஆண்டாக தொடர்ந்து வழக்கறிஞராக இருந்து வருகிறார்.
சுயமரியாதை திருமணம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற உத்தரவை பெற்றவர் வழக்கறிஞர் ஆனந்தன். மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்தும் அவரை விடுவித்தவர்.

டாக்டர் பட்டம்: ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறார். ஆவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் தங்கி படிக்க இலவசமாக இடமும் உணவும் வழங்கி வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று சட்ட விளக்கம் அளிப்பவராக இருந்து வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் மறைந்த மாநில தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் அவர்களுடன் 2006 முதல் இணைந்து தொடர்ந்து பணியாற்றியவர்.
பகுஜன் சமாஜ் கட்சியில் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் தொகுதியில் போட்டியிட்டு 41 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications