செந்தில்பாலாஜிக்கு பேஸ்ட் -பிரஷ் -சோப் கொண்டு சென்ற வக்கீல்! எல்லாமே ஆர்கானிக் புரோடெக்ட்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அவரது வழக்கறிஞர் பேஸ்ட், பிரஷ், சோப், உள்ளிட்ட பொருட்களை காலை எடுத்துச் சென்று கொடுத்திருக்கிறார்.

அப்போது அந்தப் பொருட்களை அனுமதிக்க மறுத்த அமலாக்கத்துறையினர், தாங்கள் ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தேவையான பேஸ்ட், பிரஷ், சோப் உள்ளிட்ட பொருட்களை கொடுத்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆர்கானிக் புரோடெக்ட்ஸ் யூஸ் பண்ணுவதால் அதை கொடுக்குமாறு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதால் அந்த பொருட்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.

Advocate who took paste-brush-soap to Senthil Balaji! All Organic Products!

இது தொடர்பாக பேட்டியளித்த செந்தில்பாலாஜி வழக்கறிஞர் டீமை சேர்ந்த ஒருவர், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இரவு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்கள் என்றும் எவ்வளவு நேரம் விசாரணை நடந்தது என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்ற விவரம் எல்லாம் தனக்குத் தெரியாது எனவும் கூறினார்.

தாம் அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்க்க முடியவில்லை என்றும் விசாரணையில் தலையிட முடியாது என்பதால் அதைப்பற்றி பேசவிரும்பவில்லை எனவும் செந்தில்பாலாஜி வழக்கறிஞர் கூறினார். இதனிடையே செந்தில்பாலாஜி உடல்நலம் பற்றி தன்னால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை என்று கூறிய அவர் மேற்கொண்டு செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியதால் நைஸாக நழுவிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

வரும் 12ஆம் தேதி வரை செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளதால் இனி அடுத்தடுத்த நாட்களில் ட்விஸ்ட்கள் நிகழலாம் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+