சென்னை ஐகோர்ட் முன்பாக திரண்ட வழக்கறிஞர்கள்.. E-Filling முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
சென்னை: நீதிமன்றங்களில் E-Filing முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் திரண்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கு சிரமத்தையும், கார விரயத்தையும் ஏற்படுத்தி வரும் இ-ஃபைலிங் நடைமுறையை போதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றங்களில் இ -ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இ -ஃபைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இ - ஃபைலிங் செய்யும் போது விரைவான இணைய வசதி இருத்தல் வேண்டும். அதனால், விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு என தனி செயற்கைக்கோள் தொடர்பு வசதி இருப்பது போல, நீதித்துறைக்கும் தனி செயற்கைக்கோள் தொடர்பை அமைத்தல் வேண்டும். இதேபோல், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவையான பணியாளர்களை வேலையில் அமர்த்த வேண்டும். இந்த வேலைக்கு என இன்றைக்கு 40 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோல் பணியாளர்கள் அமர்த்தப்படும் போது தான், இ - ஃபைலிங் செய்யும் வேலை சுலபமாகும் என்பது வழக்கறிஞர்கள் தரப்பின் வாதம்.
போதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் இ-ஃபைலிங்கை நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி இன்று சென்னை ஐகோர்ட் முன்பாக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இ-ஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications