இனி சென்னையை ‛டாப் ஆங்கிளில்’ ரசிக்கலாம்.. 12 ஆண்டுக்கு பின் அண்ணாநகர் 135 அடி உயர டவர் நாளை திறப்பு

சென்னை அண்ணாநகரின் அடையாளமாக இருந்த 135 அடி உயர டவர் கடந்த 2011ம் ஆண்டு பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் அழகை டாப் ஆங்கிளில் ரசிக்கும் வகையில் அண்ணாநகர் டவர் பூங்கா இருந்தது. கடந்த 12 ஆண்டுகளாக பூங்காவில் உள்ள டவர் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்ட நிலையில் தற்போது புனரமைக்கப்பட்டு மீண்டும் நாளை திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் புதுப்பொலிவு பெற்ற அண்ணாநகர் டவரில் இருந்து சென்னையின் அழகை பொதுமக்கள் மீண்டும் டாப் ஆங்கிளில் ரசிக்க முடியும்.

சென்னை அண்ணாநகரில் ‛டவர்' பூங்கா உள்ளது. இது டாக்டர் விஸ்வேஸ்வரய்யா டவர் பார்க் எனவும் அழைக்கப்படுகிறது. கடந்த 1968ல் இந்த டவரை முன்னாள் துணை ஜனாதிபதி விவி கிரி திறந்து வைத்தார்.

இது 135 அடி உயரம் கொண்ட இந்த டவரில் 12 தளங்கள் உள்ளன. லிப்ட் வசதி மற்றும் படிக்கட்டு வசதிகள் உள்ளன. மேலும் பூப்பந்து மைதானம், குழந்தைகளுக்கான விளையாடுவதற்கான வசதி, ஸ்கேட்டிங் ரிங்க் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

‛டவர்’ பூங்கா

‛டவர்’ பூங்கா

இந்த டவரின் மேல்தளத்தில் ஏறி பார்த்தால் சென்னையின் அழகை அருமையாக ரசிக்க முடியும். இதனால் டவர் மீது ஏறி பொதுமக்கள் சென்னை நகரின் இயற்கை அழகை ‛டாப் ஆங்கிளில்' ரசித்து வந்தனர். குறிப்பாக காதல் ஜோடிகளும் படையெடுத்து சென்றனர். இதனால் அண்ணநகரின் அடையாளமாக இந்த ‛டவர்' பூங்கா மாறிப்போனது.

தற்கொலையால் அனுமதி மறுப்பு

தற்கொலையால் அனுமதி மறுப்பு

இந்நிலையில் தான் காதலில் தோல்வியடைந்த சிலர் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தனர். இதையடுத்து இந்த டவர் மேல் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு முதல் டவர் மீது ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

ரூ.30 லட்சத்தில் புனரமைப்பு

ரூ.30 லட்சத்தில் புனரமைப்பு

இதற்கிடையே தான் பூங்காவில் உள்ள டவரை மாநகராட்சி நிர்வாகம் புனரமைக்க வேண்டும். டவர் மீது ஏறி பொதுமக்கள் கீழே குதிக்காத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2018 ல் ரூ.30 லட்சத்தில் டவரை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பணி துவங்கப்பட்டது.

தடுப்புகள் அமைப்பு

தடுப்புகள் அமைப்பு

உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இந்த டவர் புனரமைக்கப்பட்டு வந்தது. டவரின் மேல்பகுதியில் தடுப்பு கம்பிகள், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்புக்காக இது செய்யப்பட்டுள்ளது. மேலும் டவரின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவாக காட்சியளிக்கிறது.

நாளை திறப்பு

நாளை திறப்பு

இந்த பணிகள் தற்போது முழுமைாக முடிவடைந்துள்ளன. இதனால் இந்த டவர் நாளை திறக்கப்பட உள்ளது. இதுபற்றி சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ‛‛இந்த டவர் கடந்த மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிகள் முடிய தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த மாதம் திறக்கப்படுகிறது'' என்றார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு டவர் பூங்காவில் மேல் சென்று பொதுமக்கள் சென்னையின் அழகை ‛டாப் ஆங்கிளில்' ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+