மீண்டும் தீ பிடித்த ரயில் டீசல் டேங்கர்.. 8 மணி நேரம் போராடி அணைத்த பிறகும் தீ பற்றியதால் பரபரப்பு!
சென்னை: திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தீ விபத்தைத் தொடர்ந்து, 8 மணி நேரம் போராடி முழுமையாக தீயை அணைத்த நிலையில், மீண்டும் டீசல் கசிவு ஏற்பட்டு தீ எரிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரயிலில் இருந்த 18 டீசல் டேங்கர்கள் மளமளவென தீப்பிடித்து எரிந்து 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் டீசல் எரிந்து முழுமையாக நாசமானது. இந்நிலையில் மேலும் ஒரு டேங்கரில் தீ பிடித்துள்ளது.

ரயில் டேங்கர் தீ விபத்து
சென்னை மணலி பகுதியில் இருந்து 52 டேங்கர்கள் மூலம் டீசல் நிரப்பப்பட்டு இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ஏகாட்டூர் இடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் தடம் புரண்ட விபத்தில், ரயில் டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன.
தீயை அணைக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வர வைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மாநில பேரிட மீட்பு படையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து ரசாயனம் கலந்த நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கரும்புகையால் பாதிப்பு
டேங்கர் லாரிகள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதால் வரதராஜபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் சென்னை மார்க்கத்தில் காலை ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் கரும்புகை 10 கி.மீ தொலைவில் படர்ந்ததால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள்ல் உள்ள மக்கள் விரைந்து மருத்துவம் பார்க்கும் வசதிக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டன. 8 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டுக்குள் வந்த தீ
தீ முழுவதும் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் தண்டவாளப் பகுதியில் விழுந்துள்ள 18 டேங்கர்களை இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலமாக முழுமையாக அப்புறப்படுத்தும் பணிகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்து இருப்பதால், அதனை சீரமைக்கும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில் செல்லக்கூடிய இரண்டு வழித்தடங்கள் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு சேதமடைந்து இருப்பதால் அதை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மீண்டும் தீ
இந்த தீ விபத்தால் திருவள்ளூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு, தண்டவாள பணிகள் சீரமைக்கப்பட்டு இன்று இரவு அல்லது நாளை காலை இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயிலில் இருந்த டேங்கரை தள்ளியபோது டீசல் கசிவு ஏற்பட்டு மீண்டும் தீப்பிடித்தது. ஏற்கனவே 18 டேங்கர்கள் முழுமையாக எரிந்த நிலையில், மேலும் ஒரு டேங்கரில் தீ பிடித்தது. அதை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications