சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9 மாதங்களுக்கு பிறகு... தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் இன்று முதல் திறப்பு... குடிமகன்கள் உற்சாகம்..!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

Recommended Video

    #BREAKING டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி..!

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்கள் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி மூடப்பட்டன. இதில் மதுக்கடைகளை மட்டும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அரசு திறந்துவிட்டது.

    After 9 months Tasmac bars in Tamilnadu open today

    ஆனால் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பார்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மது அருந்துவதற்காக பார்களுக்கு செல்வோர், இனி தங்கள் அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.

    இதுமட்டுமல்லாமல் அரசு விதித்துள்ள மேலும் சில விதிமுறைகளின் விவரம் பின்வருமாறு;

    *பாருக்குள் தும்மலோ, இருமலோ வந்தால் டிஷ்யூ காகிதம் அல்லது கைகுட்டையை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.

    *சமூக இடைவெளியை பார் ஒப்பந்ததாரர்கள் அவசியம் கடைபிடிக்க வைக்க வேண்டும்.

    *பாரின் நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் சோதிக்க வேண்டும்.

    * கிருமிநாசினிகளை பாருக்குள் வைக்க வேண்டும்.

    *பாரில் வயதான பணியாளர்கள், உடல்நலக் குறைபாடு உள்ள பணியாளர்களை பணிக்கு வைக்கக் கூடாது.

    * ஏசி பொருத்தப்பட்ட பாரில் வெளிக்காற்று 50% வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை குடிமகன்களுக்கும், பார் ஒப்பந்ததாரர்களுக்கும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரகம் விதித்துள்ளது. இதனிடையே பல மாதங்களுக்கு பிறகு பார்கள் திறக்கப்படுவதால் குடிமகன்கள் உற்சாகம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After 9 months Tasmac bars in Tamilnadu open today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X