சாதி தான் என் அரசியல் எதிரி.. அரசியல்வாதியான பின் சில சமரசங்கள் செய்ய வேண்டியுள்ளது.. கமல்ஹாசன்!
சாதியே என் அரசியல் எதிரி என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.
சென்னை: அரசியல்வாதியான பின்னர் சில சமரசங்கள் செய்ய வேண்டியுள்ளதாக மக்கம் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நீலம் புத்தக நிலையத்தை திறந்து வைத்த கமல்ஹாசன், சாதியே என் அரசியல் எதிரி என்று தெரிவித்துள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.இரஞ்சித். தலித் அரசியல் முன்வைத்து சினிமா, கலை, பண்பாட்டு தளங்களில் செயல்பட்டு வரும் பா.இரஞ்சி, நீலம் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனும், பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் நீலம் புக்ஸ் என்ற புத்தக விற்பனை நிலையத்தை பா.இரஞ்சித் தொடங்கி உள்ளார். இந்த புத்தக விற்பனை நிலையத்தை நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

கமல்ஹாசன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், பா.இரஞ்சித் ஏராளமான சினிமா எடுத்திருக்கிறார். அதற்கு நான் சென்றதில்லை. ஆனால் அதனைவிட முக்கியமான விழாவுக்கு வந்திருக்கிறேன். நானும், அவரும் இல்லாத போதும் இருக்கப்போகும் தாக்கம் இந்த புத்தக நிலையம். அரசியல் என்பது தனியாகவும், கலாச்சாரம் என்பது தனியாகவும் வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். ஆனால் நாம் உருவாக்கியதே அரசியல். இங்கே அனைவரும் தலைவர் என்று அனைவரும் உணரும் போது உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.

சாதியே முதல் எதிரி
எனது முக்கியமான அரசியல் எதிரி சாதி தான். அதனை நான் 21 வயது பையனாக இருக்கும் போதே சொல்லி இருக்கிறேன். இப்போது பதமான வார்த்தைகளில் சொல்லும் பக்குவம் வந்திருக்கிறது. அவ்வளவு தானே தவிர, கருத்து மாறவில்லை. சக்கரக்கிற்கு பின் மனிதனின் மாபெரும் ஸ்ருஷ்டி கடவுள். அதனை மறக்க கூடாது. நமது உருவாக்கம் நம்மையே தாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதன் கொடூரமான ஆயுதம் சாதி. அதனை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது அம்பேத்கர் சொல்லியது. அது இன்றுவரை நடந்த பாடில்லை.

மய்யமும் நீலமும்
அந்த தொடர் போராட்டத்தின் நீட்சியாக தான் நீலம் பண்பாட்டு மையத்தை பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை எழுத்துகள் வேறாக இருந்தாலும், நீலமும் மய்யமும் ஒன்று தான். நான் மய்யம் பத்திரிகையை தொடங்கியதற்கான காரணமும் அதுதான். மய்யம் பத்திரிகையில் நான் எழுதி இருக்கும் தலையங்கங்களை பார்த்து வியப்பு ஏற்படுகிறது. அரசியல்வாதியான பின், சில சமரசங்கள் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆனால் இளைஞராக இருந்த போது எனக்கு சமரசங்கள் இல்லை. அந்த கருத்துகள் இன்று எனக்கு வியப்பாக உள்ளது.

வாழ்த்து
அதுபோல் இரஞ்சித் ஆரம்பித்த வைத்த போராட்டம், அவருக்கு வயதான பின்னர் இந்த முயற்சிகளுக்கு ரசிகராக மாற வேண்டும் என்பதுதான் என் வாழ்த்து. தொடர்ந்து பயணிக்கும் போது தடங்கல்கள், போராட்டங்கள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே என் வாழ்த்து. என்னையும் உங்களில் ஒருவனாக சேர்த்துக் கொண்டது மிகவும் பெருமை என்று தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications