அடிதூள்.. விரைவில் தமிழ்நாட்டிற்கு அடுத்த வந்தே பாரத் ரயில்.. மோடியின் மாஸ் பிளான்.. எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கும் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

 After Chennai Coimbatore Vande Bharat Train success, Madurai to get the new train

இதையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. விரைவில் இந்த ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு உள்ளது.

சென்னை - மதுரைக்கும் , மதுரை - சென்னைக்கும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

மாற்றங்கள் செய்ய வேண்டும்:

மதுரைக்கு வந்தே பாரத் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வேகமாக செல்லும் ரயில்கள். அதனால் தண்டவாளங்களை புனரமைக்க வேண்டி இருக்கும். அதேபோல் சில இடங்களில் தண்டவாளங்களை மாற்ற வேண்டி இருக்கும்.

இதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடக்க உள்ளன. அதேபோல் சில இடங்களில் பெரிய வளைவுகள் இருந்தால் அதை நீக்க வேண்டி இருக்கும். உதாரணமாக வளைவுகள் மிகவும் குறுகலாக இருந்தால் அங்கே வந்தே பாரத் ரயில் வேகமாக திரும்ப முடியாது.

இதனால் அங்கே வேகம் குறைக்க வேண்டி இருக்கும். அதை சரி செய்ய தற்போது ஆய்வு பணிகள் தற்போது நடக்க உள்ளன. மேலும் சில பாலங்கள் வந்தே பாரத் வேகத்தை தாங்காது.

அதையும் சரி செய்வதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே கேட்களில் இருக்கும் மெல்லிய தண்டவாளங்களில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டி இருக்கும். அதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடக்க உள்ளன.

இந்த பணிகள் முடிந்து மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் 6 மாதங்களுக்குள் மதுரைக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை ரயில்

தற்போது சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பெரிய அளவில் மக்கள் இடையே வரவேற்பு கிடைத்து உள்ளது. ஏற்கனவே சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

அதேபோல் கோவையில் இருந்து பெங்களூருக்கு இன்னும் ஒரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+