Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛கிரேட் எஸ்கேப்’.. 45 நாளுக்கு பின் புழல் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிஎப் வாசன்! காரில் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புழல் சிறையில் இருந்து டிடிஎப் வாசன் இன்று வெளியே வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் பைக்கில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் ஜாமின் கிடைத்ததால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார். இந்த டிராவலின்போது அவர் செய்யும் சாகசங்களை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

After court gives condition bail TTF Vasan release from Puzhal jail in chennai

இதற்கிடையே டிடிஎப் வாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி பைக்கில் அவர் செல்வதாக பல வழக்குகள் பதிவாகி உள்ளது. இருப்பினும் டிடிஎப் வாசன் பைக்கில் வேகமாக செல்வதை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து வந்தார்.

இதற்கிடையே தான் அவர் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்தகைய நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி டிடிஎப் வாசன் விலையுயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மராட்டியத்துக்கு சென்றார். காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் பைக்கில் முன்சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயன்றார்.

இந்த வேளையில் அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். பைக் பல அடி தூரத்துக்கு பல்டி அடித்து விழுந்து நொறுங்கியது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு டிடிஎப் வாசனின் லைசென்ஸ் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. அவரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே தான் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட்டு சென்றார். இதன்மூலம் அவர் 45 நாள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+