அடுத்த புயல் ரெடியாகிறதா?.. வங்கக்கடலில் ஜூன் 11ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையம்!
சென்னை: வடக்கு வங்கக்கடலில் ஜூன் 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம்தான் அடுத்தடுத்து இரண்டு புயல் தாக்கியது. அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை தாக்கியது. இன்னொரு பக்கம் யாஷ் புயல் வங்கக்கடலில் உருவானது.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

எப்படி
இந்த நிலையில் வடக்கு வங்கக்கடலில் ஜூன் 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா, மாறாதா என்று வானிலை மையம் இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம் வலுவானதாக இருக்கலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

புயல்
11ம் தேதி இங்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் அதே நேரம் இன்னொரு பக்கம் அரபிகடடலில் தென்மேற்கு காற்று காற்று வேகமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. ஜூன் 10ல் இருந்து தென்மேற்கு காற்று அதிகரிக்கும். இதனால் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

எங்கு
இதன் காரணமாக மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் ஜூன் 11ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் ஜூன் 11-13க்குள் தென்மேற்கு பருவமழையை தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும்.

மீண்டும் வரும்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை தொடங்கி கொல்கத்தா வர பல்வேறு முக்கிய நகரங்களால் அடுத்த சில நாட்களுக்கு கனமழைஇ பெய்யும். திசா, மேற்கு வங்கத்தில் அதி தீவிர கனமழை ஜூன் 10, 11 தேதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications