தொடங்கிய 5 மாநில தேர்தல்.. ஆபரேஷன் ஸ்டார்ட்- கசிந்த அதிமுக ’ஷிண்டேக்கள்’ லிஸ்ட்.. எடப்பாடி அப்செட்?
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பாஜகவின் 'அதிரடி ஆபரேஷன்கள்' தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரங்கேறும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் வாக்குப் பதிவுகள் அனைத்தும் நவம்பர் 30-ல் முடிவடைந்து டிசம்பர் 3-ல் வாக்குகள் எண்ணப்படும். தற்போதைய நிலையில் 5 மாநிலங்களில் ராஜஸ்தானில் மட்டும்தான் பாஜக ஆட்சிக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. இதனையே வாக்கு எண்ணிக்கைகளும் உறுதிப்படுத்தினால் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவுக்கு ஆகப் பெரும் பின்னடைவாக வே கருதப்படும். 5 மாநில தேர்தல்களில் பிரதமர் மோடியை மத்திய அரசின் சாதனைகளை முன்னிறுத்தி ஒரு அக்னி பரீட்சை போலவே எதிர்கொண்டது பாஜக. ஆகையால்தான் பாஜகவுக்கு இது மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

"இந்தியா" முதல்வர்களுக்கு குறி: தற்போதைய சூழ்நிலையைப் போலவே பாஜக, 5 மாநில தேர்தல்களில் பெரும் பின்னடைவை சந்தித்தால் சில மாதங்களில் வர இருக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஒட்டுமொத்த இந்திய அரசியல் ஆட்டங்களையே தலைகீழாக மாற்றிப் போடும் ஆபரேஷன்களை அதிரடியாக கையில் எடுக்கும் பாஜக என்கின்றன டெல்லி தகவல்கள். இதன் முதல் கட்டமாகவே 'இந்தியா' கூட்டணியின் மாநில முதல்வர்கள் ஒருவரையும் விட்டு வைக்காமல் அமலாக்கத்துறை நெருக்கடி வளையத்தில் கொண்டு வந்துள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவா, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமலாக்கத்துறை வளையம் இறுகிக் கொண்டிருப்பதும் வெளிப்படையான ஒன்றுதான்.
டார்கெட் அதிமுக?: இந்தியா கூட்டணியை சிதைத்து சுக்கு நூறாக்குவது ஒரு ஆபரேஷன் என்றால், தம்முடன் கூட்டணியில் இருந்து முதுகில் குத்திவிட்டு போன மாஜி கூட்டணி கட்சிகளை சிதறடிப்பது பாஜகவின் அடுத்த ஆபரேஷனாம். இந்த 2-வது ஆபரேஷனில் "முதலிடம்" தமிழ்நாட்டின் அண்ணா திமுகவுக்குதானாம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது பெரிய கட்சி என மரியாதை கொடுத்து பிரதமர் மோடிக்கு அருகே இருக்கை போட்டு சிறப்பு செய்தது பாஜக. ஆனால் திடீரென பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அதிமுக முடிவெடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இதனை பாஜக வேடிக்கை பார்க்கிறது. இந்த அமைதிக்குப் பின்னால் ஆகப் பெரும் பிரளயம் வரப் போகிறது என்கிற தகவல்கள் டெல்லியில் இருந்தே எடப்பாடி தரப்புக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்.
எத்தனை ஷிண்டேக்கள்?: டெல்லியில் இருந்து எடப்பாடி தரப்புக்கு வந்த தகவல்களில், நம்ப முடியாத சில மாஜி அமைச்சர்கள் கூட தமது தலைமைக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைக்க ரெடியாகி இருப்பதாக சொல்லப்பட்டதாம். ஒரு ஷிண்டே, 2 ஷிண்டே இருந்தால் பரவாயில்லை.. கூடி இருப்பது எல்லாம் ஏக்நாத் ஷிண்டேக்களாகவே இருந்தால் எப்படி எதிர்கொள்வதோ என்கிற விரக்தியிலும் வேதனையிலும் இதனை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு. 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாடு தான் தேசிய அரசியலில் தலைப்பு செய்தியாக இருக்கும் என்கின்றன ஆரூடங்கள்!
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications