மத்தியில் மட்டுமில்லை.. மாநிலத்திலும் விஜய்க்கு நெருக்கடி? ‛தெறி’ படத்தை கூட ரிலீஸ் செய்ய முடியவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படம் ரீலிஸ் ஆக இருந்தது. ஆனால் சென்சார் சான்று பிரச்சனையால் திரைப்படம் வெளியாவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த ‛தெறி' திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்தியில் மட்டுமில்லை மாநிலத்திலும் விஜய் திரைப்படம் வெளியாகாமல் இருக்க நெருக்கடி கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தது முதல் விஜய் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி வருகிறார். அவரது பிரசாரத்தில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் சிபிஐ விசாரணைக்கு நேற்று அவர் ஆஜரானார்.

Theri vijay cinema

மேலும் அவரது கடைசி திரைப்படமான ‛ஜனநாயகன்' பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ‛சென்சார்' சான்று கிடைக்கவில்லை. இதனால் அந்த திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

அதுமட்டுமின்றி ‛சென்சார்' சான்று கோரி உச்சநீதிமன்றத்திலும் தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. நாளை முதல் பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளதால் இனி இந்த வழக்கு விசாரணை அடுத்த திங்கட்கிழமை அல்லது அதற்கு பிறகு தான் வெளியாகும். இதனால் ‛ஜனநாயகன்' திரைப்படத்தை எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இதற்கிடையே தான் கடந்த 10ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தனது எக்ஸ் பக்கத்தில், ‛விஜயின் ‛தெறி' திரைப்படம் ரி ரீலிஸ் செய்யப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகினர். ஆனால் தற்போது அந்த திரைப்படத்தின் ரி ரீலிசும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ‛தெறி' படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். அதில், ‛‛புதிதாக ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ‛தெறி' திரைப்படத்தின் ரீ ரீலிஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகதால் மத்திய பாஜக அரசை பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சென்சார் சான்று வழங்கும் வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விஜய் ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலரும் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் தற்போது ‛தெறி' படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்தியில் மட்டுமில்லை மாநிலத்திலும் விஜய் திரைப்படம் வெளியாகாமல் இருக்க நெருக்கடி கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+