சல்லி சல்லியாய் நொறுங்கிய கூட்டணி கணக்குகள்! விஜயால் கதர் கட்சியில் பஞ்சாயத்து! உருவானது புதிய அணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வந்தாலும் அவரை கூட்டணியில் சேர்க்க சில கட்சிகள் தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் விஜய் குறித்தான விவாதங்கள் அதிகரித்து வருகிறது. விஜய் ஆதரவு - விஜய் எதிர்ப்பு என்ற புதிய அணி காங்கிரஸ் கட்சியில் உருவாகி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கரூர் துயரத்துக்குப் பிறகு, தமிழக அரசியலில் பெரிய மாற்றக் காற்று வீசுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் தற்போது தன் இல்லத்திலிருந்து கூட வெளியே வராத நிலையில் இருந்தாலும், அவரை கூட்டணிக்குள் சேர்க்க இரண்டு பெரிய தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் பெரிய திட்டத்தோடு களமிறங்கியுள்ளன.

கரூர் நிகழ்வில் 41 பேர் உயிரிழந்ததும், 160 பேர் காயமடைந்ததும் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த துயரத்துக்கு பின்னர், விஜயை குறி வைத்து அரசியல் வட்டாரங்களில் பல திசைகளிலும் பேச்சுகள் கிளம்பியுள்ளன.

vijay congress tvk

கரூர் துயரம்

பாஜகவும், அதிமுகவும், அந்த சம்பவத்தின் மீதான பொறுப்பை திமுக அரசின் மீது திசைதிருப்பும் வகையில் விளக்கங்கள் வெளியிட்டன. இதனால், விஜயின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் அவர் தப்புவதற்கான நிலையை உருவாக்கியது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுக -பாஜஜ அணியில் இணையுங்கள்" என்ற அழுத்தத்தை பாஜக தரப்பில் இருந்து விஜயிடம் வைக்கும் முயற்சி நடக்கிறது. ஆனால், தொடக்கம் முதலே பாஜகவை பாசிச கட்சி என விமர்சித்து வந்த விஜய், அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது சரிப்படுமா என்ற குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் கூட்டணி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலும் விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பல பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. தமிழக காங்கிரஸில் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு, விஜயுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டில் நம்மை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, திமுகவுடனான உறவை இப்போது முறிக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் விஜய் ஆதரவு அணி, விஜய் எதிர்ப்பு அணி என இரண்டு பிரிவுகள் உருவாகி விட்டன.

ராகுல் காந்தி விஜய்

ஒரு பக்கம், விஜய்-ராகுல் காந்தி நட்பும் பேசப்படுகிறது. கரூர் துயரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி நேரடியாக விஜயை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், விஜயுடன் கூட்டணி வைத்தால் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரியிலும் நம்மை வலுப்படுத்தலாம் என கணக்கு போடுகின்றனர். தவெக தரப்பில், 60 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, அமைச்சரவை இடங்கள் போன்ற முக்கிய பேச்சுகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தவெகவோடு கூட்டணி

இதனால், காங்கிரஸ் தலைவர்களில் சிலர் தவெகவோடு கூட்டணி வைப்பது ஒன்றும் தவறல்ல என பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால், டெல்லி லாபியில் திமுகவின் தாக்கம் இன்னும் பலமாகவே இருப்பதால், காங்கிரஸ் அந்த உறவை முறிக்காது. அதற்குப் பதிலாக, விஜயை காரணம் காட்டி தொகுதி பேரத்தை அதிகரிக்க முயற்சிக்கும் என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.

செல்வப் பெருந்தகை கருத்து

இது ஒரு புறம் இருக்க தமிழக காங்கிரஸில் விஜய் ஆதரவு அணி விஜய் எதிர்ப்பு அணி என்ற இரு பிரிவுகள் உருவாகி இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகை தொடர்ந்து திமுகவுடன் தொடர வேண்டும் என விரும்புகிறார். கடந்த மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதற்கு திமுக தான் காரணம் என்பது செல்வபெருந்தகையின் எண்ணம். வரும் 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்ந்தால் குறிப்பிட்ட அளவு எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு கிடைப்பார்கள். இது தேசிய அளவில் அந்த கட்சி அங்கீகாரம் பெற உதவும் .புதிதாக வந்திருக்கும் விஜயை நம்பி களத்தில் இறங்கினால் மூன்றாம் இடம், நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டால் காங்கிரஸின் நிலை பரிதாபகரமாக மாறிவிடும் என்பது செல்வப் பரிந்துரையின் எண்ணமாக இருக்கிறது.

திமுக கூட்டணி

அதே நேரத்தில் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் இருப்பதால் அவர்கள் நம்மை மதிப்பதில்லை. மற்ற கட்சிகளைப் போல நம்மை கருதாமல் திமுகவின் ஒரு அங்கம் போலவே நினைக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிகள் குறைத்து கொடுக்கப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களும் பேசி வருகிறார்கள். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி இப்போது பூசல் அதிகரித்து இருக்கும் நிலையில், தற்போது விஜயால் மேலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+