‛ஹைஅலர்ட்’.. கேரளா குண்டுவெடிப்பால் 5 தமிழக எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு.. அதிரடி சோதனை
சென்னை: கேரளாவில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை கூட்டத்தில் இன்று அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒருவர் பலியான நிலையில் 52 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது ஒருவர் சரணடைந்த நிலையில் தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள 5 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ரயில் நிலையங்களில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் கிறிஸ்தவர்களின் ஹெஹோவா விட்னஸ் வழிபாடு கூட்டம் நடந்தது. இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலை சுமார் 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் அடுத்தடுத்து வெடித்தது.

இதில் ஒருவர் பலியான நிலையில் 52 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் 10 பேர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் 5 பேரின் நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் முதலில் இது வெடிவிபத்து என கூறப்பட்டது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வெடித்தது வெடிகுண்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது ஐஇடி வகையை சேர்ந்த டிபன் பாக்ஸ் குண்டுகள் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவின் தீவிரவாத ஒழிப்பு படை, கேரளா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணையில் தான் டொமினிக் மார்ட்டின் என்பவர் யார்? அவர் எதற்காக குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கேரளா குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளா-தமிழக எல்லை மாவட்டங்களா உள்ள கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் பிற மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வனத்துறையினரும் கண்காணிப்பை தீவிரமாக்கி உள்ளனர். கேரளாவில் இருந்து யாராவது தமிழ்நாட்டுக்கு வனப்பகுதி வழியே நுழைகின்றனரா? என்பதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோவையில் மலையாள மக்கள் வழிபடும் தேவாலயங்களில் மோப்பநாய் உதவியுடன் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ரயில்களில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் ஹைஅலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications