அடியாளை அனுப்புகிறார்.. பெரிய ஆபத்து.. என்னது அண்ணாமலையா? புயலை கிளப்பிய காயத்ரி ரகுராம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் வைத்துள்ள விமர்சனத்தில், அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடியாளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார் அதன் மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம். இதையடுத்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை, அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் வைத்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விட்டுள்ளார். இந்த நிலையில்தான் அண்ணாமலை தன்னை அடியாளை வைத்து மிரட்டியதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் வைத்துள்ள விமர்சனத்தில், அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடியாளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு. இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. இதற்கு ஒரே பதில்தான் இருக்க முடியும். விவாதிக்க எதுவும் இல்லை.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம். தேசிய அரசியல் கட்சியில் காரியகர்த்தாவை கட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயன்படுத்துவதற்காக பதிலாக இப்படித்தான் அண்ணாமலை தனது சுயநலத்திற்காக ஒரு காரியகர்த்தாவை பயன்படுத்துகிறார். கட்சியின் நலனுக்காக பயன்படுத்துவதற்காக பதிலாக தன்னுடைய சுய நலத்திற்காக காரியகர்த்தாவை அண்ணாமலை அடி ஆளாக மாற்றி அனுப்பி இருக்கிறார்.

 வார் ரூம் ஜோக்கர்கள்

வார் ரூம் ஜோக்கர்கள்

வார்ரூம் ஜோக்கர்கள், கேசவவிநாயகம் ஜி மற்றும் அமைச்சர் எல்.முருகன் ஜியை தாக்க அண்ணாமலை கொடுத்த அடி ஆளு வேலையை முதலில் செய்யுங்கள். இந்த காமெடி பீஸ் தலைவருக்கு அல்லது விமானக் கதவைத் திறந்த ஆபத்தான பீஸ் தலைவருக்கு ஒரு அடி ஆளு தேவையா? மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க அடி ஆளு அனுப்பும்படி கர்நாடகத் தந்தை தனது வாரிசுக்கு அறிவுரை கூறுகிறாரா? கர்நாடக இரட்டை ஆண் குழந்தைகள் பயணிகளை (இந்தியாவை) விமானக் கதவைத் திறந்து ஆபத்தில் ஆழ்த்துவதற்காக சேட்டை செய்யும் குழந்தைகளை கர்நாடக தந்தை தண்டிக்க வேண்டும்.

 காப்பாற்ற வேண்டும்

காப்பாற்ற வேண்டும்

அவர்களை காப்பாற்ற வேண்டாம். எல்லா சாமானியர்களையும் போல அவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். அவர்களை விமானத்தில் அனுமதிக்கக் கூடாது. பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு. கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிரையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+