துணைவேந்தர் நியமனத்தில் இனி ஆளுநருக்கு எந்த அதிகாரமுமே இல்லை- முடிவு கட்டிய தமிழக சட்டசபை மசோதா!
சென்னை: தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்துக்கு முடிவு கட்டியிருக்கிறது தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா. இனி தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
Recommended Video

தமிழக சட்டசபையில் இன்று தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழகச் சட்ட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக் கழக துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையிலான சட்ட முன்வடிவினை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இம்மசோதா மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், குஜராத்தில் மாநில அரசுதான் துணைவேந்தரை நியமிக்கிறது. ஆகையால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரிக்க வேண்டும். மாநில அரசுகளே துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யக் கூடிய பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரையை 2017-ல் அதிமுக ஆட்சியும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால் அதிமுக எம்.எல்.ஏக்களும் இதனை ஆதரிக்க வேண்டும் என்றார். இதன் பின்னர் சட்டசபையில் இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

இப்படிதான் நடக்கும்?
இம்மசோதா நிறைவேறி இருப்பதன் மூலம் இனி என்னதான் நடக்கும்? தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை இனி ஆளுநருக்கு பதிலாக தமிழக அரசுதான் நியமிக்கும். இதுவரை தேர்வுக்குழு ஒன்று ஆளுநருக்கு 3 பேரை பரிந்துரைத்தது. இந்த 3 பேரில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமித்து வந்தார். ஆனால் இனி துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்கும்.

அரசிடம் அதிகாரம்
அதாவது துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரிடம் இருந்த அதிகாரங்கள் இனி தமிழ்நாடு அரசாங்கத்திடம் நேரடியாக வந்துவிடும். அதேநேரத்தில் தற்போதைய கட்டமைப்பான அதாவது பல்கலைக் கழகங்களின் இணைவேந்தராக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் இருந்து வருகிறார். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதிகாரமே இல்லை
அத்துடன் இன்றைய தமிழக சட்டசபை நிறைவேற்றிய மசோதாவைத் தொடர்ந்து இனி ஆளுநரால், தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நீக்கிவிடவும் முடியாது. இது தொடர்பாக தமிழக அரசுதான் முடிவு எடுக்கும். ஆகையால் ஒட்டுமொத்த துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநர் என்பவருக்கு இருந்த அத்தனை அதிகாரங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications