நட்டாற்றில் விடப்பட்ட "பெரிய" கட்சி.. தமிழ்நாட்டில் மாறும் அரசியல் கூட்டணி.. கடலை இழந்த திமிங்கலம்
சென்னை: டெல்லியிலும் பெங்களூரிலும் மாறி மாறி முறையே ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைகளை செய்துள்ளன. இந்த ஆலோசனைகள் காரணமாக தமிழ்நாட்டில் கூட்டணி காட்சிகள் மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நேற்று முதல்நாள் பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த கூட்டணி இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு போட்டியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் நடந்தது. எங்ககிட்டயும் சீப்பு இருக்கு என்பதை காட்டும் விதமாக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.
கூட்டணி மாற்றம்: இந்த ஆலோசனைகள் காரணமாக தமிழ்நாட்டில் கூட்டணி காட்சிகள் மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. உதாரணமாக ஐஜேகே கட்சி கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தது. அதுவே இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வருகிறது.
தேமுதிக: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பாஜகவுடன் இருந்தது. இந்த முறை தேமுதிக சிக்கலுக்கு ஆளாகி உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் கூட அழைக்கப்பட்ட நிலையில் தேமுதிக அழைக்கப்படவில்லை. பொதுவாக விஜயகாந்த் மீது மோடிக்கு தனிப்பட்ட அன்பு மரியாதை உண்டு.
ஆனால் ஏனோ என்டிஏ கூட்டத்திற்கு பாஜக தேமுதிகவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தங்களை அழைக்காமல் அப்செட் செய்துள்ளதால் பிரேமலதா திமுகவுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் இறங்கி உள்ளாராம்.
இனி அதிமுக கூட்டணிக்கு செல்வது கடினம். அவர்கள் நம்மை மதிக்கவில்லை. மூன்றாவது கூட்டணி அமைப்பது எல்லாம் வேலைக்கு ஆகாத காரியம். அதனால் திமுகவுடன் இணைந்துவிடலாம் என்று பிரேமலதா நினைக்கிறாராம்,
அமமுக: இன்னொரு பக்கம் அமமுகவை திமுக ஏற்றுக்கொள்ளாது. மூன்றாவது கூட்டணி அமைக்க போதிய கட்சிகள் இல்லை. அதிமுகவும் அமமுகவை ஏற்காது. இதனால் பாஜக கூட்டணியிலும் வாய்ப்பு இல்லை. இதனால் உண்மையில் அமமுகதான் இப்போது நடு ஆற்றில் விடப்பட்டு உள்ளது.
கமல் எங்கே?: கடந்த சட்டசபை தேர்தலில் அமமுக தனித்து நின்றது. இந்த லோக்சபா தேர்தலில் என்ன செய்யும் என்று தெரியவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டி வந்தார்.
அதன்பின் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். எதிர்பார்த்தபடியே இவர்கள் கடைசியில் கூட்டணி வைத்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவும் அளித்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமின்றி திமுகவுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்தும் நேற்று கமல்ஹாசனுக்கு இந்த நிகழ்விற்கு அழைப்பு செல்லவில்லை. கிட்டத்தட்ட 4-5 சதவிகித வாக்குகள் இருந்தும் ஏன் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு செல்லவில்லை என்ற விவாதம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications