பிரதமர் மோடியை தொடர்ந்து.. முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த சோனியா.. கொரோனா குணமாக வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
Recommended Video
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 12ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வீட்டில் தனிமையில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நலம் விசாரித்த சோனியா காந்தி
மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்டாலினின் உடல்நலனை கண்காணித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி தொலைபேசியில் முக ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கொரோனா சிகிச்சை மற்றும் உடலம் நலம் பற்றி அவர் விசாரித்தார். அதோடு விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

நன்றி கூறிய ஸ்டாலின்
இதையடுத்து நலமாக இருப்பதாக தெரிவித்த ஸ்டாலின், நலம் விசாரித்த சோனியா காந்திக்கு நன்றியும் கூறினார்.முன்னதாக கடந்த மாதம் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது சோனியிா காந்தி விரைவில் குணமாக வேண்டும் என முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் முக ஸ்டாலின் விரைவில் குணமாக வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டாலினுக்கு போன் செய்து நலம் விசாரித்தார். அப்போது நன்கு குணமாகி வருவதாக தெரிவித்த ஸ்டாலின் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு
அதோடு ஜூலை 28 ம் தேதி மாமல்லபுரத்தில் துவங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் டெல்லி செல்ல இருந்ததையும் பிரதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதோடு மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, விளையாட்டு துறை அமைச்சர், தலைமை செயலாளரை அனுப்பி வைப்பதாகவும், துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications