“என் நண்பர் விஜயகாந்த் அற்புதமானவர்".. பிரேமலதா வீடியோவால் நெகிழ்ந்து போன பிரதமர் மோடி!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி - மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடையேயான உறவு குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி விஜயகாந்த் பற்றி உருக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக, தலைமுறைகள் தாண்டியும் நினைவுகூரப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

தேமுதிக
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 2 தொகுதிகளில் வென்றது. அப்போது, பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் விஜயகாந்த் என்று பிரதமர் மோடியே பாராட்டினார். 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. எனினும் பாஜக கூட்டணியில் அதிமுக மட்டும் 1 இடத்தில் வென்றிருந்தது.
2021 சட்டசபை தேர்தலில் தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2023 டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்துக்கு அவரது மறைவுக்குப் பிறகு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
தற்போது சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். அதன் முதல் கட்டமாக அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாமக, தேமுதிகவை தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

பிரேமலதா விஜயகாந்த் வீடியோ
இந்த நிலையில் பிரதமர் மோடியை பாராட்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
My dear friend Captain Vijayakanth was remarkable!
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
He and I interacted so closely over the years and also worked together.
People across generations remember him for the good he did for society. @PremallathaDmdk https://t.co/fw2SDG6GLB
பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. விஜயகாந்த் பிறந்தநாளின் போது அவருக்கு பிரதமர் அழைத்து வாழ்த்து சொல்வார். 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார்.
இந்த உலகத்தின் எந்த இடத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொன்னார். நான் உங்கள் மூத்த சகோதரனைப் போல என்று மோடி சொன்னதை எனது வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன். விஜயகாந்த் - பிரதமர் மோடி நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உருக்கமான பதிவு
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் தனித்துவமானவர், அவரும் நானும் பல ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பழகி, ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம். விஜயகாந்த் சமூகத்திற்குச் செய்த நன்மைக்காக தலைமுறை, தலைமுறையாக மக்கள் அவரை நினைவில் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications