இதுதான் முக்கியம்.. கிரிக்கெட் உலகமே ஷாக்கில் தவிக்க.. தோனியை பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு!?
கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார்.
சென்னை: கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார்.
Recommended Video
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர், உலகக் கோப்பை தொடங்கி டி20 கோப்பை வரை பல கோப்பைகளை வாங்கி குவித்த தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி ஐபிஎல் போட்டிகளில் இவர் கவனம் செலுத்த இருக்கிறார்.

தோனி ரசிகர்கள்
கிரிக்கெட் ரசிகர்களை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் தோனி குறித்து ஸ்டேட்டஸ் போட்டு வருகிறார்கள். கடைசி போட்டியில் தோனி ரன் அவுட்டாகிவிட்டார். அவர் வெற்றியோடு தனது கிரிக்கெட் தொடரை நிறைவு செய்து இருக்கலாம். இந்த கொரோனா காரணமாக எல்லாம் நாசமாகிவிட்டது. இல்லையென்றால் தோனி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருப்பார் என்று ரசிகர்கள் பலரும் டிவிட் செய்து வருகிறார்கள் .

கிரிக்கெட் உலகம்
அதேபோல் இன்னொரு பக்கம் கிரிக்கெட் வீரர்களும் சோகமாக போஸ்ட் செய்து வருகிறார்கள். அவர் ஒரு ஜாம்பவான், இந்திய அணிக்காக அவர் சிறப்பான சாதனைகளை செய்துள்ளார். உலக அளவில் கிரிக்கெட் உலகில் அவரை போல யாரும் சாதனைகளை செய்தது இல்லை. அவரின் சாதனையை கிரிக்கெட் உலகம் எப்போதும் மறக்காது என்று பலரும் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார். தோனி சோஷியல் மீடியாவில் வேறு எதுவும் போஸ்ட் செய்யாமல் ஜாலியாக தனது அடுத்த பணிகளை கவனிக்க தொடங்கிவிட்டார். 7.30 மணிக்கு இந்த கிரிக்கெட் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு , தோனி கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றுவிட்டார்.

செம
ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுக்க தோனி சென்றுவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது தோனியும் பயிற்சி எடுத்து வருகிறார்.

கண்டிப்பாக வெறி
இந்த முறை ஐபிஎல் போட்டியில் வெறித்தனமாக இவர் விளையாடுவார் என்று கூறுகிறார்கள். இன்னும் இரண்டு வருடம் தோனி ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முறை கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் தோனி விளையாட வாய்ப்புள்ளது. இதனால் அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications