செந்தில் பாலாஜி, அசோக் குமார் கைதுகள்.. அடுத்தது யார்? பரபரக்கும் கரூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அடுத்த விக்கெட் யார் என்பதுதான் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பரபரப்பான விவாதமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை, நீதிமன்ற போராட்டங்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்தது.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கில் அவரது சகோதரர் அசோக் தேடப்பட்டு வந்தார். அசோக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் கேரளாவின் கொச்சியில் இருந்த அசோக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதனிடையே செந்தில் பாலாஜி, அசோக்குமாரை தொடர்ந்து இவ்வழக்கில் அடுத்து யார் கைது செய்யப்படக் கூடும் என்பதுதான் கரூர், வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே நடந்து வரும் விவாதம்.
செந்தில் பாலாஜி வழக்கில் திமுக வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்டி சாமிநாதன் வீடு, இல்லங்களில் அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் மறைக்கப்பட்டது அல்லது எரிக்கப்பட்டது என்கிற தகவலை அமலாக்கத்துறை தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
அதேநேரத்தில் வீரா எஸ்டி சாமிநாதன், திண்டுக்கல் மாவட்ட சீனியர் அமைச்சர் ஒருவருக்கு மிக நெருக்கம். அவர் மூலமாகவே திமுகவின் வேடசந்தூர் முகமாக மாறினார் வீரா எஸ்டி சாமிநாதன். பின்னரே செந்தில் பாலாஜியுடன் கை கோர்த்தார் வீரா என்கின்றன சில தகவல்கள்.
செந்தில் பாலாஜியுடன் இணைந்து வீரா சாமிநாதனைப் போல கரூர், ஒட்டன்சத்திரத்திலும் சில புள்ளிகள் நிழல் சாம்ராஜ்ஜியங்களை நடத்தியதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால்தான் செந்தில் பாலாஜி, அசோக் குமாரை தொடர்ந்து சிக்கப் போவது யார்? என்கிற விவாதம் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications