வடக்கு.. மேற்கு ஓவர்.. அடுத்து தெற்கு.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை குறி.. ஆ அதிருதே!
சென்னை: அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கீழ் வந்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்று அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடக்கியது.
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அமலாக்கத்துறை இடைக்கால தடை நீக்கப்பட்டதும் விசாரணையை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடக்கும் வழக்கில் அமலாக்கத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் எங்களுக்கு உதவ வேண்டும் . அவர்களுடன் இணைந்து நாங்கள் விசாரணை நடத்த விரும்புகிறோம் என்று தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் கண்டுபிடிக்கும் ஆதாரங்களை அமலாக்கத்துறையும் ஆய்வு செய்யும் விதமாக இந்த மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் வைத்து இருக்கும் ஆதாரங்களை கேட்கும் திட்டத்தில் அமலாக்கத்துறை இந்த மனுவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
அதோடு தங்களிடம் முக்கியமான ஆதாரங்கள் இருப்பதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்துள்ளது. மேற்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, வடக்கில் அமைச்சர் பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கீழ் வந்த நிலையில் தற்போது தெற்கு மண்டலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் நேற்று முதல்நாள் அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி இருவரும் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார். நேற்று முதல்நாள்
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின் அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications