நேராக பெரியார் திடலுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய்.. காலணியை கழற்றிவிட்டு மரியாதை
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.
தமிழகத்தின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் விஜய் முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்றார். அவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கொள்கைத் தலைவருக்கு புகழ் வணக்கம் என்ற கோஷங்கள் முழங்க, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் விஜய்.
பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு முன்னதாக தனது காலணியை கழற்றிவிட்டார் முதலமைச்சர் விஜய். முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொடுத்து கொடுத்தார். பதிலுக்கு கி.வீரமணியும் முதலமைச்சர் விஜய்க்கும் பொன்னாடை போர்த்தி புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து சிறிது நேரம், கி.வீரமணியுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடினார். பெரியார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். இதன்பின், பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications