ஆந்திரா செல்லும் அன்புமணி.. ஆல்ரெடி திருமா அங்க தான்..! நேருக்கு நேர் பிரசாரமா? இது தான் ட்விஸ்டே!
சென்னை: ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் தவிர்த்து ஆந்திராவிலும் பாமக - விசிக மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆந்திராவை பொருத்தவரை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆந்திரா தேர்தல்: ஆளுங்கட்சியான முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும், பாஜக, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளிலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் ஆந்திராவின் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
சந்திரபாபு நாயுடு: இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தான் ஏற்கனவே பல முறை நின்று தொடர் வெற்றி பெற்று வரும் தொகுதியான குப்பம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறை அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி களத்தில் இறங்கி இருக்கும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.
அன்புமணி ராமதாஸ்: அதனை உடைப்பதற்கு சந்திரபாபு நாயுடுவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் குப்பம் தொகுதி தமிழக ஆந்திர எல்லை ஒட்டிய பகுதி என்பதோடு மட்டுமில்லாமல் வன்னியர்கள் அதிகம் வாழும் தொகுதியாகவும் உள்ளது அதனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைத்து அங்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று அன்புமணி ராமதாஸ் வரும் ஒன்பதாம் தேதி காலை அங்கு தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்..
நிர்வாகிகள் தீவிரம்: அதனை ஒட்டி சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த பாமக நிர்வாகிகள் அங்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் நிலையில் அங்கு அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து குப்பம் சட்டமன்ற தொகுதியிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்பதாம் தேதி அன்புமணி அங்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் அதற்கு அடுத்த நாட்களில் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திராவிலும் மோதல்: தமிழகத்தைப் பொறுத்தவரை பாமக-விசிக எலியும் பூனையும் ஆகவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் சின்னம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக சிறுத்தைகள் கட்சி ஆந்திராவில் கர்நாடகாவில் போட்டியிடுகிறது. ஆனால் தமிழகத்தை தவிர பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை எனவே வரும் காலங்களில் அடுத்த அருகில் இருக்கும் மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அன்புமணி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர் பாமகவினர்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications