நட்டாவின் "சீக்ரெட்" மீட்டிங்.. சசிகலா கொடுத்த க்ளூ.. எடப்பாடியை திக்கி திணறடித்த மாஜி! இது உண்மையா?
சென்னை: அதிமுகவில் இருக்கும் மாஜி அமைச்சர் ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் அந்த மாஜி அமைச்சர் தரப்பில் இருந்து இது தொடர்பாக வெளிப்படையாக எந்த முயற்சிகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
அதிமுகவில் உட்கட்சி மோதல் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டி உள்ளது. கட்சிக்கு உள்ளே நிர்வாகிகள் பல்வேறு தரப்பாக பிரிந்து கிடக்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒரு பக்கம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மறுபக்கம் என்று நிர்வாகிகள் பல தரப்பாக பிரிந்து கிடக்கிறார்கள். இதனால் கட்சிக்குள் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த பின்பே யார் யாருக்கு சப்போர்ட்.. யார் யாருக்கு எதிரி என்பது கட்சிக்குள் தெரிய வரும்.

மாஜி அமைச்சர்
இந்த நிலையில்தான் மாஜி அமைச்சர் ஒருவர் பற்றிய தகவல் தமிழ்நாடு அரசியலை உலுக்கி உள்ளது. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றிய புகார்தான் அது. சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா திடீரென மதுரைக்கு வந்தார். பாஜக நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் நட்டா ஆலோசனை செய்தார். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. மதுரையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி பாஜக தலைவர்களிடம் பேசி இருக்கிறாராம். நாம் தனியாக போட்டியிட முடியாது.

ஆலோசனை
அதிமுகவுடன் கூட்டணிதான் வைக்க வேண்டும். ஆனால் இந்த முறை 15 எம்பி இடங்களையாவது கேட்க வேண்டும் என்று இந்த ஆலோசனையில் பேசப்பட்டு இருக்கிறதாம். அதோடு தமிழ்நாடு அரசியல் பற்றி பல விஷயங்கள் இந்த மீட்டிங்கில் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை வந்த நட்டாவை மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்ததாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் சந்தித்து ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது.

குட்கா
குட்கா வழக்கை தற்போது மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ கையில் எடுத்துள்ளது. இதில் வழக்கு தொடுத்து விசாரணை செய்யும் முடிவில் சிபிஐ உள்ளது. இந்த நிலையில்தான் சிபிஐ அழுத்தத்தை குறைக்க விஜயபாஸ்கர் நட்டாவை பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டன. இதனால் எடப்பாடி பழனிசாமி விஜயபாஸ்கர் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்தன.

அதிருப்தி
இந்த அதிருப்தியின் ஈரம் காய்வதற்கு முன்பாக தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் தரும் வகையில் இன்னொரு விஷயத்திலும் அவரின் பெயர் அடிபட்டு உள்ளது. அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக நடத்துவது குறித்து, தனது ஆதரவாளர்கள் பலரையும் நேற்று தனது சென்னை இல்லத்திற்கு அழைத்திருந்தார் சசிகலா. இதில் பல விஷயங்களை சசிகலா ஆலோசனை செய்தார். திமுக முன்னாள் அமைச்சர்கள் ஓரிருவரை தவிர எல்லோரும் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறிய சசிகலா, எம்சி சம்பத், விஜயபாஸ்கர் போன்றவர்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

சசிகலா
அதாவது விஜயபாஸ்கர் தன்னிடம் பேசிக்கொண்டு இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். இதுதான் அதிமுகவில் தற்போது புயலை கிளப்பி உள்ளது. முதலில் ஜெ.பி நட்டாவுடன் விஜயபாஸ்கர் சந்தித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது சசிகலாவுடன் அவர் பேசிக்கொண்டு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு உள்ளது. விஜயபாஸ்கர் பெயர் இப்படி அடுத்தடுத்து இரண்டு பெரிய விஷயங்களில் அடிபட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எங்கே எடப்பாடிக்கு எதிராக விஜயபாஸ்கர் எதுவும் காய் நகர்த்துகிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

விஜயபாஸ்கர்
அதாவது விஜயபாஸ்கர் மட்டும் தனி ரூட்டில் சொல்கிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து இப்படி காய் நகர்த்துவதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவில்லை. அவர் எங்கும் இதுவரை தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர் எங்கும் எடப்பாடியை எதிர்த்து பேசவில்லை என்பதால் சசிகலா சொல்வது உண்மைதானா? அல்லது தனது தொண்டர்களை திருப்திப்படுத்து சசிகலா இப்படி பேசுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications