Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாதங்கள் முடிந்ததும் நீதிபதி கேட்ட முதல் கேள்வியே எடப்பாடியை நோக்கித்தான்.. ஐகோர்ட்டில் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்ததும் நீதிபதி கேட்ட முதல் கேள்வியே எடப்பாடி பழனிசாமி தரப்பை நோக்கித்தான் இருந்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிந்ததும் நீதிபதி கேட்ட முதல் கேள்வியே எடப்பாடி பழனிசாமி தரப்பை நோக்கித்தான் இருந்தது. இதனால் ஐகோர்டில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமையான இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்த பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பும் வாதத்தை முன்வைத்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிடுகையில், பொதுச்செயலாளர் தேர்தல் கட்சி உள்விவகாரங்களில் தொடர்புடையது. நீக்கப்பட்டவர்கள் எதிர்த்து வழக்கு தொடர முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது. வழக்கு தொடர்ந்தவர்கள் ஒபிஎஸ் சார்பாக தொடர்ந்துள்ளனர். வழக்கு தொடர்ந்தவர்கள் நேரடியாக தேர்தலால் பாதிக்கப்படவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டாலும், அனைத்து தீர்மானங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓபிஎஸ் பின்புலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தேர்தல் அறிவிப்பு ஒரு நாட்களில் வெளியிடவில்லை

தேர்தல் அறிவிப்பு

தேர்தல் அறிவிப்பு

புதிய இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட உறுப்பினர் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.அதிமுக வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள், அதிமுகவின் அடித்தளத்தை அசைத்து பார்க்க விரும்புகின்றனர். உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியா? என்ன அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை மட்டுமே விசாரித்தது. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை எதிர்க்கவில்லை. பொதுக்குழு ஒற்றை தலைமையை விரும்பியது

ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

1 கோடியே 65 லட்சம் பேர் ஒற்றை தலைமையை விரும்பினர். அதனால் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. தீர்க்கப்படாத களங்கத்தை அதிமுக மீது ஏற்படுத்தவே பன்னீர்செல்வம் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கட்சி உறுப்பினர்களின் எண்ணங்களை பிரிதிபலிக்கும் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கலாம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதையே உச்சநீதிமன்ற தீர்ப்பும் வெளியிட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சங்கவிதிகள் என்ன

சங்கவிதிகள் என்ன

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செயல்படாத முடியாத நிலையில், மனுதாரர்கள் எப்படி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வழக்கு தொடர முடியும். சங்க விதிகளின் படி எந்த உறுப்பினரும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017ல் பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளர் பதவி தோற்று விக்கப்பட்டது. மீண்டும் பொதுக்குழுவால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் எந்த விதிமீறல்களும் இல்லை.

அதிகாரம் உள்ளது

அதிகாரம் உள்ளது

அதிமுக நிறுவனர் எம்.ஜிஆர் கட்சி தொடங்கிய போது, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என விதி கொண்டுவரப்பட்டது. 2017ல் கட்சி விதி திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மாற்றப்பட்டது. தற்போது 2022ல் பொதுக்குழுவில் மீண்டும் அடிப்படை உறப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என விதி திருத்தப்பட்டது. சங்க விதிகளின் படி கட்சி விதிகளை திருந்த பொதுக்குழுவுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என எடப்பாடி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

எடப்பாடிக்கு கேள்வி

எடப்பாடிக்கு கேள்வி

ஐகோர்டில் இரு தரப்பு வாதங்கள் முடிந்ததும் நீதிபதி கேட்ட முதல் கேள்வியே எடப்பாடி பழனிசாமி தரப்பை நோக்கித்தான் இருந்தது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு ஏப்ரல் 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டிய காரணம் என்ன? தேர்தலை நடத்துங்கள், ஆனால் முடிவை தீர்ப்பு வரும் வரை அறிவிக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+