Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு.. கெடு விதித்த சென்னை மாநகராட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, குடிநீர் வரியும் உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டது.

செப்.30 வரை கெடு

செப்.30 வரை கெடு

ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் - செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சென்னையில் 12.5 லட்சம் சொத்து வரி உரிமையாளர்கள் உள்ளனர்.

குடிநீர் வரி உயர்வு

குடிநீர் வரி உயர்வு

சொத்து வரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அவை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டது. இதில் 23 சதவிகிதம் சொத்து வரியாக மாநகராட்சி வசூலிக்கிறது. 7 சதவிகிதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது.

7.75 லட்சம் குடிநீர் இணைப்புகள்

7.75 லட்சம் குடிநீர் இணைப்புகள்

குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவிகிதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும்.

ரூ.120 கோடி வருவாய்

ரூ.120 கோடி வருவாய்

கடந்த 10 வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை. 2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்எம்எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது. குடிநீர் வரி உயர்வு சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+