மோடி அமைச்சரவையில் இடமில்லை... இனி என்ன செய்யும் அதிமுக.. அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?
மத்திய அமைச்சரவையில் இடம் இல்லாததையடுத்து என்ன செய்ய போகிறது அதிமுக
Recommended Video
சென்னை: ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் ஓபி.ரவீந்திரநாத் குமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவுடனான இனி அவர்களது அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்க போகிறது என்பதில்தான் பெரிய எதிர்பார்ப்பே அடங்கி உள்ளது.
நேற்று மத்திய அமைச்சரவையில் அதிமுக சார்பில் ஒருவருக்கு பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் தன் மகனுக்காகவும், கட்சி சீனியரான வைத்திலிங்கத்துக்காக முதல்வரும் பதவியை வாங்கி தர கடுமையாக முயற்சி செய்தார்கள்.
இதனிடையே, டெல்லிக்கு வரச்சொல்லி மேலிடத்தில் இருந்து போன் வரவும் தமிழக அரசியலே பரபரப்பானது. ஏனென்றால், என்னதான் ஓபிஎஸ் பாஜகவுக்கு நெருக்கடி தந்தாலும், ஒட்டுமொத்த அதிமுக தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்பதால், எப்படியும் பதவி கிடைக்கும் என சொல்லப்பட்டது.

பெரிய ஷாக்
அதுமட்டுமில்லை, இதற்காக இவரது ஆதரவாளர்கள் பதவியேற்றபின் வரவேற்க ரவீந்திரநாத்குமாரின் போஸ்டர்களை 2 நாளைக்கு முன்னாடியே ஒட்டி மகிழவும் தொடங்கிவிட்டனர். ஆனால், அதிமுகவில் யாருக்குமே பதவி தரப்படாதது அக்கட்சிக்கு பெரிய ஷாக்கை தந்துள்ளது!

அங்கீகாரம்
இதை அதிமுக எப்படி எடுத்து கொள்ள போகிறது என தெரியவில்லை. மக்களின் எதிர்ப்பை மீறி விரும்பி கூட்டணி வைத்தது. இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், குறைந்தபட்ச வாக்குகளையாவது அக்கட்சி பெற்றிருக்கும் அல்லது மக்கள் கோபம், அதிருப்திக்கு ஆளாகாமல் ஆவது இருந்திருக்கும். இப்போது தேர்தல் வாக்குகளில் தோற்று, கட்சி செல்வாக்கையும் இழந்து, மத்திய அமைச்சர் பதவியும் தரப்படாமல், ஒரு அங்கீகாரத்தையே இழந்து நிற்கிறது.

கறார் தலைவர்
இன்னும் 2 வருட ஆட்சியில் இவைகளை எல்லாம் களைந்து கட்சியை காப்பாற்ற எடப்பாடி கடுமையாக போராட வேண்டியிருக்கும். இதற்காக அவர் என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்பதுதான் தெரியவில்லை. முதலில் அதிமுகவுக்கு ஸ்தாபன ரீதியாக ஒரு தலைவர் தேவைப்படுகிறார். ஜெயலலிதாவுக்கு பிறகு யாரிடமும் "கட் அண்ட் ரைட்" தலைவர் கட்சிக்கு இல்லாததே பெரிய மைனஸ்.

எடப்பாடி அரசு
அடுத்ததாக கட்சியை வலுப்படுத்த வேண்டியுள்ளது. தொண்டர்களின் அதிருப்திகளை போக்க வேண்டியுள்ளது. இதற்காக அமமுகவை இணைக்க எடப்பாடி தயாரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒருவேளை இதற்கு சம்மதம் இல்லையானால், அமமுக தரப்பில் உள்ள பலம் வாய்ந்த வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகிய 2 பேரையும் எடப்பாடி தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சி மேற் கொள்வார் என்றே தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் இருவரும் உடன் இருந்தால் அதிமுக பலமாகும் என்றுகூட முதல்வர் யோசிப்பார்.

பிரச்சாரம்
மகனுக்கு சீட் வாங்குவது முதல், தேனிக்கு முதல்வரை பிரச்சாரத்துக்கு அழைத்தது, வாரணாசி சென்றது, கடைசிவரை மகனுக்கு பதவி வாங்கி தர ஓபிஎஸ் எடுத்த முயற்சிகளையும் அதிமுக தலைமை உன்னிப்பாகத்தான் கவனித்து வந்தது. இதனையடுத்து பல விவகாரங்களில் எடப்பாடி தரப்பு உஷாராகவே காய் நகர்த்தவே கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications