Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இந்த விஜய் வந்து நிப்பான்”.. ஆவேச பேச்சை தொடர்ந்து கரூர் வீடியோவை பகிர்ந்து வரும் திமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: “மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. இந்த விஜய் கேள்வி கேட்பான்." என தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் பேசிய நிலையில், திமுகவினர், கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து விஜய் உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்னை சென்றது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதற்காக இன்று காலை விஜய் விமானத்தில் கோவை வந்தார். பின்னர்.காரில் ஈரோடுக்கு புறப்பட்டு சென்றார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில் விஜயபுரி அம்மன் கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

After Vijay s Erode Speech DMK Shares Karur Video to Attack TVK Leader

தவெக தலைவர் விஜய் பேசுகையில், “பெத்த அம்மா கொடுக்கிற தைரியத்தை விட எதுவுமே கிடையாது. ஒரு மனுஷனால எதையும் சாதிச்சு காட்ட முடியும். அப்படி ஒரு தைரியத்தை தான் இப்ப நீங்க என்னோட அம்மா அக்கா தங்கைகள் நண்பா நண்பிகள் தோழர்கள் எல்லோரும் கொடுத்து இருக்கீங்க. அதே தைரியத்தோடு கூடவும் நிக்கறீங்க. இதை எப்படி பிரிச்சி விடலாம் இதை எப்படி கெடுக்கலாம் என்ன எல்லாம் நம்ம விஜய் மேல அவதூறு சொல்லலாம் என்ன எல்லாம் சூழ்ச்சி பண்ணலாம். இப்படி சூழ்ச்சியை மட்டும் நம்பி பொழப்பு நடத்தும் சில சூழ்ச்சி கார கூட்டங்கள் தொடர்ந்து செஞ்சிகிட்டு தான் இருக்கு.

ஆனா அவங்களுக்கு தெரியாது இது இன்னைக்கு நேத்து வந்த உறவு இல்ல.. 33 வருஷத்துக்கு மேல இருக்கிற உறவு.நான் சினிமாக்கு வந்த போது என் வயசு 10. அப்போ இருந்து இந்த உறவு ஸ்டார்ட் ஆகி போயிட்டு இருக்குனு அவங்களுக்கு தெரியாது. இந்த விஜய்யை மக்கள் ஒரு போதும் கைவிட மாட்டாங்க. மக்கள் கூடவே நிப்பாங்கனு அவங்களுக்கு தெரியாம போச்சு.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போய் மக்கள் பிரச்சனைகளாஇ பேசிட்டு வரேன்.. இது அரசியல் இல்லையா..? அப்ப எது அரசியல்.. உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவா அசிங்க அசிங்கமா பேசுறது தான் அரசியல்னா அந்த அரசியல் நமக்கு வராது. வராதுனா.. நல்லாவே வரும் உங்களை விட எனக்கு நல்லாவே வரும்.. வேணாம்னு விட்டு வெச்சி இருக்கோம். அப்ப உங்களுக்கு நமக்கும் என்ன வித்தியாசம்.

காஞ்சிபுரத்துல நாங்க சொன்னது எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு பேசுறீங்க. இப்ப சொல்றேன் நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது,மக்களுக்கான சலுகைகளை இலவசம் என சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசுல மக்களுக்கு செய்யுறதுல எப்படி இலவசம் சொல்லுவீங்க. அப்படி கொடுத்தது ஓசி ல போறேன் ஓசி ல போறேன் அசிங்க படுத்துறீங்க. என்ன.. கேக்குறது ஆள் இல்லை நினைசீங்களா? மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்..இந்த விஜய் கேள்வி கேட்பான்.

இந்த விஜய் எப்பவுமே மக்கள் பக்கம் தான். அதேமாதிரி மக்களும் என் பக்கம் தான். என் மக்கள் மானத்தோடும், மரியாதையோடும், கெளரவத்தோடும் வாழனும். என் மக்கள் யாருக்கும் கீழ கிடையாது. அப்படி அவங்க கெளரவத்தோட வாழனும்னா அவங்களுக்கான வாழ்க்கை தரம் உயரணும். அவங்களோட வாழ்வாதாரமும் உயரனும், அது உயர்ந்தால் தான் அவர்களின் பொருளாதாரம் உயரும். இதுக்கான வழிகளை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இதற்கான திட்டங்களை செயல்படுத்தனும். இதெல்லாம் செஞ்சால் தான் அந்த அரசாங்கம், நல்ல அரசாங்கம். இதைத்தான் அன்றைக்கு காஞ்சிபுரத்தில் சொன்னோம். சொன்னா மட்டும் போதுமா எப்படி செயல்படுத்துவீங்கனு கேக்குறாங்க. நாங்க என்ன வாயிலயே வடை சுடுறதுக்கு திமுக-வா? டிவிகே டா ” என ஆவேசமாகப் பேசினார் விஜய்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலர் உயிரிழந்த நிலையில் அங்கு அவசர அவசரமாக பேசிவிட்டுப் புறப்பட்ட விஜய், விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில், செய்தியாளர்கள் குழுமி நின்று கரூர் துயரச் சம்பவம் பற்றி கேள்வி எழுப்பியதற்கும் எந்த பதிலும் அளிக்காமல் வேகமாகச் சென்றார் விஜய்.

கரூர் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சென்னை வந்த பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் 2 பதிவுகளை வெளியிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, விஜய் பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியானது. தவெக கட்சியினரும், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், “மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. இந்த விஜய் கேள்வி கேட்பான்." என தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் பேசிய நிலையில், திமுகவினர், கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து விஜய் உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்னை சென்றது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். திமுக ஐடி விங் துணை செயலாளர் இசை உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+