வேளாண் நகைக்கடன் 40000-ல் இருந்து 2 லட்சம் வரை! விவசாயிகளுக்கு கொட்டும் பணம்! நில அடமானம் தேவையில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது.. தங்கத்தின் விலை சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், விவசாயிகள் தங்களின் விவசாயத் தேவைகளுக்காக நகைக்கடன்களை பெருமளவில் நாடி வருகின்றனர்.. இந்த புதிய போக்கினால், வேளாண் நகைக்கடன் சந்தை நாடு முழுவதும் 40 சதவீதத்திற்கும் மேலான அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.. அதாவது கூட்டுறவு வங்கிகளைத் தாண்டி வணிக வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களாம்..

வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 முதல் 11 சதவீதம் மட்டுமே என்பதால், பிற தனியார் கடன் ஆதாரங்களை விட இது விவசாயிகளுக்குக் குறைந்த சுமையைத் தருகிறது.. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறைகளும் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.. நாட்டின் ஒட்டுமொத்த நகைக்கடன்களில் 65 சதவீதம் கிராமப்புறங்களில்தான் பெறப்படுகிறது என்பதும், இதில் வேளாண் நகைக்கடன்கள் எந்த அளவுக்கு கிராமப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துகின்றன என்பதையும் காட்டுகிறது..

Agriculture Gold Loan Agri Loan Kotak Mahindra Bank Gold Loan Growth Farm Credit Sripad Jadhav Indian Banking News Farmers Loan Scheme

கூட்டுறவு வங்கி வேளாண் நகைக்கடன்

விவசாயிகள் தங்களின் அவசரக் காலத் தேவைகளுக்கும், அடுத்த கட்டப் பயிர் சாகுபடி செலவுகளுக்கும் இந்த நகைக்கடன்களை ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதுகிறார்கள்.

நிலத்தை அடமானம் வைக்கும் சிக்கலான நடைமுறைகள் இல்லாமல், தங்க நகைகளை மட்டும் வைத்து மிக விரைவாகப் பணம் பெறுவது அவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கிறது.. தங்கம் விலை உயர்வால், குறைந்த நகைக்கே அதிகத் தொகை கிடைப்பது விவசாயிகளின் வாங்கும் திறனை அதிகரித்துள்ளது..

அரசு மற்றும் தனியார் வங்கிகள் விவசாயிகளுக்குத் தரும் முன்னுரிமை காரணமாக, வேளாண் நகைக்கடன் துறை வரும் காலங்களில் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இத்தகைய கடன் வசதிகள் கிராமப்புறங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு 40 சதவீதம் கடன்

பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், விவசாயத் தொழிலைத் தடையின்றித் தொடரவும் இந்த நகைக்கடன் முறை ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.. தங்கம் விலை உயர்வு மற்றும் எளிமையான நடைமுறைகள் இணைந்து, இந்திய விவசாயிகளின் கடன் பெறும் முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், வேளாண் நகைக்கடன்களை அதிக அளவுக்கு விவசாயிகள் நாடுவதால் அவை, 40 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளதாக, கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது..


40,000 முதல் 2 லட்சம் வரை வேளாண் கடன்

இதுகுறித்து அதன் சில்லறை வேளாண் மற்றும் நகைக்கடன் பிரிவு தலைவர் ஸ்ரீபாட் ஜாதவ் சொல்லும்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.. முன்பெல்லாம் 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை மட்டுமே கடன் பெற்று வந்த நிலையில், இப்போது தங்கம் விலை உயர்வால் 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் எளிதில் கிடைக்கிறது..

இதில் வேளாண் நகைக் கடன்களின் பங்கு 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவற்றுள் பெரும்பாலான கடன்கள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளாலேயே வழங்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் வேளாண் நகைக்கடன்கள் தொடர்பான தெளிவான விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. முன்பெல்லாம், பயிர்க்கடன் பெறவே விவசாயிகள் தங்கள் நிலத்தை அடமானமாக வைக்க வேண்டியிருந்தது.

நாட்டின் ஒட்டுமொத்த கடன் சந்தையின் அளவு 316 லட்சம் கோடி ரூபாய்.. இதில் வேளாண் நகைக் கடன்களின் பங்கு 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.. இவைகளில் பெரும்பாலான கடன்கள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளாலேயே வழங்கப்படுகின்றன.. எனவே, வேளாண் நகைக்கடன் விவசாயிகளின் தேர்வாக உள்ளது என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+