‘முதல்வரையும் கேள்வி கேட்டீங்களா?’... விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா வைத்த செக்! புது பஞ்சாயத்து
சென்னை: தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், சினிமா துறையிலும் அதற்கான அதிர்வுகள் தெளிவாக தெரிந்து வருகின்றன. குறிப்பாக, அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமா துறை பொறுப்பு ஒதுக்கப்பட்ட விவகாரம் கோலிவுட்டில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் விஷால் தெரிவித்த கருத்துக்கு ஏற்கனவே பல தரப்பில் எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணாவின் பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஷால் பதிவு
அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமா துறை ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையுலகின் செயல்பாடுகள் குறித்து முழுமையான அனுபவம் இல்லாதவரிடம் இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக விஷால் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, சிலர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
"ஒருவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் அவர் எதுவும் தெரியாதவர் என்று எப்படி முடிவு செய்யலாம்?" என்ற கேள்வியே பலரிடமும் எழுந்தது. ராஜ்மோகன் நடிகராகவும் இருந்தவர்; சினிமா துறையின் அடிப்படை இயக்கங்களை அறிந்தவர்தான். அப்படியிருக்கையில், ஆரம்பத்திலேயே அவரை தகுதியற்றவர் போல காட்டுவது சரியல்ல என்ற கருத்துகளும் வெளிப்பட்டன.
நடிகர் கிருஷ்ணா பதிவு
இந்த சூழ்நிலையில்தான் நடிகர் கிருஷ்ணா தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். "நம்ம முதல்வரும் இந்த பொறுப்புக்கு புதியவர்தானே... அங்கே எந்த கேள்வியும் இல்லை; ஆனால் ராஜ்மோகன் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு?" என்று நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, தன்னுடைய சொந்த அனுபவத்தையும் கிருஷ்ணா நினைவுபடுத்தி இருக்கிறார். ஒரு பிரச்சனையில் சிக்கியிருந்தபோது உதவி கேட்டு அணுகியபோது, தேர்தல் முடிந்த பிறகு பார்ப்போம் என கூறப்பட்டதாகவும், பின்னர் அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்த பதிவு வெறும் அரசியல் கருத்தாக இல்லாமல், விஷாலுடன் இருந்த பழைய மனக்கசப்பின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. "இது செம பதிலடி", "விஷால் கேட்ட கேள்வியில் தவறு இல்லை", "கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு", "ஒருவரை முன்கூட்டியே தீர்ப்பு சொல்லக்கூடாது" என்று இரு தரப்பிலும் ரசிகர்கள் விவாதத்தில் இறங்கியுள்ளனர்.
நடிகர் கிருஷ்ணா விளக்கம்
குறிப்பாக, "நான் வழக்கமாக யாரையும் விமர்சிப்பவன் இல்லை. ஆனால் வாய்ப்பு கூட கொடுக்காமல் விமர்சிப்பது சரியில்லை" என்ற கிருஷ்ணாவின் நிலைப்பாடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஷால் எழுப்பிய கேள்வி சரியானதா, அல்லது கிருஷ்ணா கூறுவது போல ஒருவருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து பார்த்த பிறகுதானா விமர்சிக்க வேண்டும் என்ற விவாதம் தற்போது கோலிவுட்டின் புதிய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அரசியல் மாற்றத்தின் தாக்கம் சினிமா உலகத்திலும் இப்படியாக திறந்த மோதலாக மாறி இருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
-
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications