சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி
மதுரை: சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது. ஒரே ராத்திரியில் 144 போடுவதை போல எல்லாவற்றையும் மாற்ற முடியாது. போக போகத்தான் எல்லாம் சரியாகும்.. தமிழக மக்கள் தவெக வேட்பாளர்களின் முகம், பெயர், சாதி, மத. கூட தெரியாமல் விஜய் முகத்திற்காக வாக்களித்தார்கள். விஜய்க்கு யாரை நிறுத்த வேண்டும். யாரை நீக்க வேண்டும் என நன்றாக தெரியும். அதிமுக நிலவும் பிரச்சனைகளை அவர்களே கூடி பேசி முடிவெடுக்க வேண்டும் என நடிகர் வையாபுரி பேட்டி அளித்தார்
திரைப்பட நடிகரும் பிக் பாஸ் புகழ் நடிகர் வையாபுரி அவர்கள், இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மதுரை, எஸ் எஸ் காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில், பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசிகளை வழங்கிய நடிகர் வையாபுரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "எனது நண்பர் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆட்சி அமைந்து 2 வாரமாக சிறப்பாக அவர் நினைத்து போல நடந்து கொண்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் பிராமணர்களுக்கு 2 அமைச்சர் பதவி கொடுத்ததை பற்றி தேவையற்றதை பேசுகிறார்கள். 2 பிராமணர்களுக்கு பதவி கொடுத்ததால் ஆளாளுக்கு கருத்து பதிவு செய்து வருகிறார்கள். இவருக்கு ஏன் அவருக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுத்தார்கள் என பேசுகிறார்கள்.
கடந்த காலங்களில் ஒரு தொகுதியில் எந்த சாதி பலம் அதிகமோ அந்த சாதிக்கு தான் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை. தமிழக மக்கள் தவெக வேட்பாளர்களின் முகம், பெயர், சாதி, மதம் கூட தெரியாமல் விஜய் முகத்திற்காக வாக்களித்தார்கள்.
ஸ்ரீரங்கம் ஜெயலலிதாவின் தொகுதி. ரமேஷ் எந்த சாதி மதம் என யாருக்குமே தெரியவில்லை. விஜய் சாருக்கு மட்டுமே அந்த தொகுதி மக்கள் வாக்களித்தார்கள். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை மாற்ற சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அவரை மாற்ற விஜய்க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஒருவர் சொல்லி மாற்றினால் மாற்றிக்கொண்டே தான் செல்ல வேண்டும்.
ஒருமுறை முடிவு செய்தால் என்பேச்சை நானே கேட்க மாட்டேன் என விஜய் படத்தில் பேசியுள்ளார். அவ்வாறு தான் அரசியலில் செயல்படுவார் என நம்புகிறேன். விஜய்க்கு யாரை நிறுத்த வேண்டும். யாரை நீக்க வேண்டும் என நன்றாக தெரியும்.
அதிமுகவில் நிலவும் பிரச்னைகளை அவர்களே கூடி பேசி முடிவெடுக்க வேண்டும். சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது. ஒரே ராத்திரியில் 144 போடுவதை போல எல்லாவற்றையும் மாற்ற முடியாது. போக போகத்தான் எல்லாம் சரியாகும். விஜய் பிஸியாக இருப்பதால் நான் அவரை சந்தித்து வாழ்த்து சொல்லவில்லை. நிச்சயமாக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பேன், என்றார்.
-
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி












Click it and Unblock the Notifications