தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை... ஓ!! இது தான் காரணமா!!
சென்னை: ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தமிழக எம்எல்ஏக்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு பல மாதங்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
இருப்பினும், ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பின்னர் நிலைமை அப்படியே மாறியது. டிசம்பர் மாத்தில் கடைசி 2 வாரங்கள் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினசரி வைரஸ் பாதிப்பு 600ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபோக வேறு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர்
முன்னதாக தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகத்தில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெகடிவ் சான்றிதழ்
அதன்படி வரும் ஜன.5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கவுள்ளது. அதற்குத் தேவையான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், சட்டசபை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
Recommended Video

கொரோனா பரிசோதனை
இதனால் தமிழக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதேபோல செய்தியாளர்கள் மற்றும் அவை ஊழியர்களுக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இன்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications